பகுதி 1 பகுதி 2
அழகா ஆங்கிலம் பேசலாம் தொடருக்கு நீங்க அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி..
இந்தப் பகுதியில் மேலும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளைப் பற்றிப் பார்க்கலாம்.
1. Mister (Mr): இரண்டாம் பாகத்தைப் படித்து விட்டு டுபுக்கு ரங்கா தனிமடலிலும் Floraipuyal மணிவண்ணன் பின்னூட்டத்திலும் இந்த mister
பத்தி சொன்னார்கள். இந்த வார்த்தையை பாகம் 3க்கான வரைவில் வைத்திருந்தேன். இப்போ இதைப் பற்றி:
இத ஆங்கிலப் பிழைன்னு சொல்றத விட சமூகப் பிழைன்னு சொல்றது சரின்னு நினைக்கிறேன். இந்தியாவில் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட குமார் சார் என்றோ
Mr.Kumar (first name) சொல்வது வழக்கம். முதலாவது தேவையில்லை, இரண்டாவது தவறு.Sir என்பது ஒரு பட்டம், எல்லாரையும் அப்படி
கூப்பிடத் தேவையில்லை. Mister விஷயத்துக்கு வருவோம். மிஸ்டரை Surname அல்லது Last name உடன் தான் உபயோகிக்க வேண்டும். Hello
சச்சின் என்றோ Hello Mr. Tendulkar என்றோதான் கூறுவது வழக்கம். Hello Mr. Sachin என்று கூறுவது மரபல்ல. நான் ஏன் முதல்ல
சமூகப்பிழைன்னு சொன்னேன்னா தமிழகத்தில் சாதியை ஒழிக்கிறேங்கற பேர்ல சர்நேமை ஒழிச்சிட்டோம். சர்நேம் ஒழிஞ்சிருச்சு, சாதி இன்னும் ஒழியல. என்னை Mr. நாரயணன் என்று
அழைக்கும் போது தலையில் அடித்துக்கொள்வேன், என்ன செய்வது தவறு என்னிடம் இருக்கு அழைப்பவரிடம் இல்ல.
2. வால்பையனுக்கு பிடித்த சப்ஜெக்ட் : Hard Drink : முதல்ல விக்கி வாத்யார் என்ன சொல்றார்ன்னு பாப்போம்
An alcoholic beverage is a drink that contains ethanol (commonly called alcohol). Alcoholic beverages are divided into
three general classes: beers, wines, and spirits.
நம்மாளுங்க பீரை Cold எனவும் விஸ்கி / பிராந்தி இன்ன பிற வகைகளை Hot Drink னும் பிரிச்சிட்டாங்க. விக்கி வாத்யாருக்கு Hot Drink னா
என்னன்னே புரியால. இனிமே விஸ்கிய Hot drink ன்னு சொல்லாம Hard Drink ன்னு சொல்லுவீங்கதானே..
3. How Can I go to ....: ஒரு எடத்துக்கு வழி கேக்கும் போது பலர் கேட்பது இப்படித்தான். உத (உண்மைத்தமிழன் இல்லீங்க உதாரணம்)
சென்னை தி.நகரில் இருந்து வடபழனிக்கு போக யாராவது என்னிடம் How can I go to Vadapalani ன்னு கேட்டா You can go
either by walk or by bus or you can take an auto இல்ல உருண்டுகிட்டும் போகலமுன்னு சொல்வேன், ஏன்னா அவர் கேட்டது அதுதான்.
How can I get to Vadapalani ன்னு கேட்டா, உஸ்மான் சாலையில் சென்று கோடம் பாக்கம் நெடுஞ்சாலையில இடப்பக்கம் திரும்பி நேராப்போனா
வடபழனி வரும்னு சொல்வேன். How can I get there என்று கேட்டுப் பழகுங்கள்.
4. பள்ளியில் கேள்வியை மாத்தி பதில் சொல்ற டெக்னிக்கை டீச்சர் கத்துக் கொடுத்தாங்க (What is your name ? My name is ..), கேள்விய Statement
ஆ மாத்துறத யார் சொல்லிக் குடுத்தாங்கன்னு தெரியல. Will you come to Office tomorrow? ன்னு கேக்கறதுக்கு You will come to office
tomorrow NO ன்னு கேக்கக் கூடாது. You will give this to me No, You agree with me no எல்லாம் இதே மாதிரி தான்.
இதே போல பேசும் போது ஒவ்வொரு வாக்கியத்துக்கும் You know, like, all that stuff போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Well you know that restaurant was good, you know I was there last evening (yesterday evening இல்ல), like it was amazing
food, like I had idly and all that stuff. like the waitress was beautiful like it was a you know great evening.
படிக்கும் போது எவ்வளவு எரிச்சலா இருக்கு, இப்படி பேசினா கேக்கறவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
5. Hotel க்கும் Restaurant க்கும் உள்ள வித்தியாசத்த தெரிஞ்சிக்கறது முக்கியம். தங்குவதற்கு அறைகள் இருந்தால் மட்டுமே அது Hotel.
சாப்பாடு / Drinks மட்டுமே கிடைக்கும் இடம் Restaurant. உடுப்பி ஹோட்டல் என்பது தவறு. ஹோட்டல் சரவண பவனுக்கு சென்று ரூம் கேட்டு
அடிவாங்கினால் நான் பொருப்பல்ல....
ஒரு முக்கிய அறிவிப்பு : Long weekend க்கு நான் ஒபாமா வீட்டாண்ட (Washington DC) போறதுனால, கடைக்கு மூணு நாள் லீவு. உங்களுக்கெல்லாம்
மூணு நாள் மொக்கயிருந்து விடுதலை. வழக்கம் போல வந்து துப்பிட்டு போங்க, செவ்வாக்கிழமை வந்து மொத்தமா தொடச்சிக்கறேன்...
Friday, September 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
Your post is useful. But I have 2 opinions:
1. Is it wrong that if we change the language usage according to each land/country (Is language is static or dynamic).
2, This first name, second name, surname concept should not be followed in India. IN US/UK/Arab one lady will marry/divorse 2 or 3 husbands. So they want to add their father's name too while mentioning their name.
Is that custom required in India?. I do not know why should I add my father, grand father's name with my name.
//How can I get to Vadapalani ன்னு கேட்டா, உஸ்மான் சாலையில் சென்று கோடம் பாக்கம் நெடுஞ்சாலையில இடப்பக்கம் திரும்பி நேராப்போனா
வடபழனி வரும்னு சொல்வேன். How can I get there என்று கேட்டுப் பழகுங்கள். //
பழகிக் கொள்கிறேன்.
புதிய தகவலொன்றை அறிந்து கொண்டேன்.
ரைட்டு....தொடருங்கள் :)
So...when should I use yesterday ?
If yesterday evening is not right , Can you tell me some examples of right usage of yesterday.
"I was there yesterday" -Idhu rightaa ?
Hi Ramji
Good to see that my scribbles create confusion, it will only lead to clarification - May be from me or from some one else. Already Scholars like Dharumi, Sword Fish, Florai Puyal, Dubukku (I mean it Ranga) are closely watching this blog. Some one will clarify all our doubts.
coming to your queries:
1. No doubt the language is DYNAMIC, English has the highest adaptability in my opinion. But there is difference between localization and wrong usage.
2. People from every part of the world have Surnames. It is common in India too (TN is an exception) Sharma, Agarwal, Advani, Gandhi, Khan - they are all surnames. Take the list of names of Indian cricketers or Actors. you will find Surnames in all the names except people from TN. Sachin Tendulkar, Zaheer Khan, Anil Kapoor... Vs. K.Srikanth, Vijay, Prasanna. Hope you can see the difference.
It is a custom to add the husband's surname to the fist name of the wife as long as the marriage is in force. I have seen names like Eunice Kennedy Shriver (Kennedy from father and shriver from marriage) - having both the surnames.
2b. Thats exactly what I'm saying. No need to add my father's name to mine. I should ideally be called Sriram Iyengar and not Sriram Narayanan. We did have the surnames and dropped it few decades ago.
Let the forum know if your queries are still unanswered...
Hope to see you again ....
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கனக கோபி.
உபயோகமாக இருந்ததில் எனக்கு சந்தோஷம்.
ஆதரவுக்கு நன்றி ஆதவன்
தொடர்கிறேன்
வாங்க நித்யா..
I was there yesterday என்று சொல்வது சரியே, I was there yesterday night ன்னு சொல்லக்கூடாது என்பதல்ல, I was there last night என்பது அழகான ஆங்கிலம்.
காலத்தைக் குறிப்பிடும்போது (morning, evening, afternoon,night) yesterday, today, tomorrow வராது.
மற்றபடி அவற்றை உபயோகிக்கலாம், see you tomorrow, I went yesterday, I will do this job today etc..
யாரையும் சார் என்று அழைக்ககூடாதா?
ஹாட் டிரிங் என்பது ஏனென்றால், பீர் கூலிங்கா இருக்கும் ஆனா சரக்கு அப்படி இருக்காதுன்னு ஒரு குடிமகன் சொன்னார்!
ஆனால் அது ஹார்டு டிரிங்கன்னு எனக்கு தெரியும்!
வாங்க வாலு
சார் என்று அழைக்கத் தேவையில்லை என்பது என் கருத்து. ஏனெனில் அது ஒரு பட்டம்/ கவுரவ விருது.
சர். சி.வி.ராமன் தகுதியுடையவர், ஸ்ரீராம் சர் தகுதியில்லாதவர். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
Hard Drink : இது பத்தி உங்களுக்குத் தெரியாம ஏதாவது விஷயம் இருக்க முடியுமா
ஆஹா.. நீங்க.. ஒபாமாவோட புது வூட்டுக்கா...?
நான் ஒபாமாவோட பழைய ஊட்டுக்கு போய்ட்டு, அங்க (தமிழ்)மசாலா மணக்க ஒரு புடி புடிச்சிட்டு, அப்பாலிக்கா நயாகரால ஒரு குளியலை போட்டுட்டு, அப்பாலிக்கா சொதந்திர ஆத்தாவை கண்டுகினு, புதனாண்டைதான் வர்றேன்.
குஜாலா போய்கினு வாங்கோ..! :)
எப்டி நம்ப இங்லீசு?! :) :)
ஆமா பாலா DC க்கு போகிறேன்.
Enjoy your trip to Niagara / NYC.
உங்க லாங்குவேஜ் பிரமாதம், ஆனா இத்த சென்னைத்தமிழ்னு சொல்வாங்க
//
சமூகப்பிழைன்னு சொன்னேன்னா தமிழகத்தில் சாதியை ஒழிக்கிறேங்கற பேர்ல சர்நேமை ஒழிச்சிட்டோம். சர்நேம் ஒழிஞ்சிருச்சு, சாதி இன்னும் ஒழியல. என்னை Mr. நாரயணன் என்று
அழைக்கும் போது தலையில் அடித்துக்கொள்வேன், என்ன செய்வது தவறு என்னிடம் இருக்கு அழைப்பவரிடம் இல்ல.
//
ஆமாம் சில விஷயங்கள் என்னவோ
இப்படியே பழக்கத்துல இருக்கு
ஆமா பெண்களுக்கு mrs/ miss . last name ....இது எப்படி பொருந்தி /பொருந்தாம போகிரதுன்னும் சொல்லுங்க ஸ்ரீராம்.
//you know that restaurant was good, you know I was there last evening (yesterday evening இல்ல), like it was amazing
food, like I had idly and all that stuff. like the waitress was beautiful like it was a you know great evening.
படிக்கும் போது எவ்வளவு எரிச்சலா இருக்கு, இப்படி பேசினா கேக்கறவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்.
/////
மகா எரிச்சல்தான் ....
//
நம்மாளுங்க பீரை Cold எனவும் விஸ்கி / பிராந்தி இன்ன பிற வகைகளை Hot Drink னும் பிரிச்சிட்டாங்க. விக்கி வாத்யாருக்கு Hot Drink னா
என்னன்னே புரியால. இனிமே விஸ்கிய Hot drink ன்னு சொல்லாம Hard Drink ன்னு சொல்லுவீங்கதானே/////
நாங்க இந்தப்பக்கம் போறதில்ல:) என் சிநேகிதி வீட்டு நாய் பேரு விஸ்கி!
ஹோட்டல் சரவண பவனுக்கு சென்று ரூம் கேட்டு
அடிவாங்கினால் நான் பொருப்பல்ல....
’’’//
:):) சரிதான்:0
ம்ம்.நல்வரவு DCக்கு..!
வாங்க ஷைலஜாக்கா
ஆமா பெண்களுக்கு mrs/ miss . last name ....இது எப்படி பொருந்தி /பொருந்தாம போகிரதுன்னும் சொல்லுங்க ஸ்ரீராம்.
Mr. மாதிரித்தான் Mrs இன் உபயோககும், Mrs. Gandhi என்பதுதான் மரபு. Mrs. Sonia Gandhi அல்ல.
Mrs. Jayalalitha ன்னு கருணாநிதி சொன்னது ஆங்கிலமல்ல அரசியல், நமக்கு அது வேண்டாம்...
ஷைலஜா
Miss. so and so.
some for my thought, பாத்துட்டு சொல்றேன்.
மகா எரிச்சல்தான் ....
Same Blood...
:)
நாங்க இந்தப்பக்கம் போறதில்ல:) என் சிநேகிதி வீட்டு நாய் பேரு விஸ்கி!
முதற்கண் நாங்கன்னு சொல்றதுக்கு தங்க்ஸ் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா?
அந்த நாயை வால்பையனுக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். என் சாய்ஸ் பிராண்டி தான்...
உங்க நல்வரவுக்கு நன்றி, உங்கள பாக்க முடியாதது வருத்தமே.:(
There is always a next time...:)
ennanga asura speedla padhivu podaringa..! "HotBostonGuy@yahoo.com " hihihihi...
Porkodi (பொற்கொடி) said...
ennanga asura speedla padhivu podaringa..! "HotBostonGuy@yahoo.com " hihihihi...
அதெல்லாம் ஒண்ணும் இல்ல பொற்கொடி, நம்மாளுங்க நிறைய தப்பு செஞ்சி எனக்கு ஒதவறாங்க, நான் சும்மா 4-5 தப்ப குறிப்பிட்டு ஒரு பதிவு போடறேன்.
அதென்ன ஹி ஹி
ennadhu mothama thodachupingla? ungaluku silaiye vekkalam pola iruku! varushathuku oru dadava echam ellam thudaicha podhum pola :)
Happy long weekend, HotBostonGuy@yahoo.com! ;)
Mukiyama solla vendiyadhu idhane: useful post as always! abba.. indha you know/like/right - kodumaiya yen kekkaringa.. mudilada sami!
neenga endha zonela irukinga? adhukulla velai ellam vitutu blogla ee otiti irukinga?? oh ennadhu, enikku velai pathen nu kekringla? adhu seri :)
நான் பாஸ்டன்ல இருக்கேன் பொற்கொடி,
ரெண்டு மூணு முறை கேட்டுட்டீங்க..
வலைப்பூவின் பெயரே பாஸ்டன்ஸ்ரீராம் தானே...
என்னப் பத்தி கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கீங்களே...
எனக்கு சிலை வைக்க முடிவு செய்தமைக்கு நன்றி பொற்கொடி, எப்போ மாடலிங்குக்கு வரணும்னு சொல்லுங்க..
விடுமுறை வாழ்த்துக்கு நன்றி. நீங்க என்ன பண்றீங்க long weekend ல
you know/ like : why blood?? same blood...
haiyo chi aamam! pere boston sriram, ennoda pinju moolaiku ettala sriram :)
long weekendla oru mukkiyamana velai baby sit panna sollittanga.. naan pona maasam 4 leave potrundhen, apo enoda velaiya pathadhuku nandri kadan.
ஓ அப்படியா பொற்கொடி..
Enjoy Babysitting
ஒரு baby யே baby sitting பண்ணுதே...
கவுஜ கவுஜ...
idhu! idhu!! seriya sonninga sriram.. indha kutti paapas ellam inrou kutti paapa madhri bommai vechurukume. adhu madhri :D
பொற்கொடி
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு..
நான் சொன்னது கவிதைன்னு முதல்லயே சொல்லிட்டேன்...
:)
Porkodi (பொற்கொடி) said...
haiyo chi aamam! pere boston sriram, ennoda pinju moolaiku ettala sriram :)
பிஞ்சு மூளையா கொஞ்சூண்டு மூளையா பொற்கொடி??
உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுக்கள். நல்ல வேளை இப்போதாவது உங்கள் வலைப்பூவை பார்த்தேனே என்ற மகிழ்ச்சி. என்னுடைய வலைப்பூவினையும் உங்களைப்போன்ற நண்பர்கள் பார்த்தால் மகிழ்வேன்.
நல்ல இடுகை.
//இப்படி பேசினா கேக்கறவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்//
ஹிஹி, அதை யார் சொல்றாங்கன்னு அதை பொறுத்தது. பொதுவா சப்பாத்திகளுக்கு இந்த 'யு நோ' இல்லாம பேச வராது. :))
Mr, Mrs - நிறையா தகவல்கள். அடிச்சு ஆடுங்க ஸ்ரீராம்.
@கேடி, பிஞ்சு மூளையா? நேர்ல பாக்காமையா போவோம், அப்ப இருக்கு உனக்கு. :))
பேபி சிட்டிங்கல அடிக்கடி டயப்பர் மாத்த யோகம் பிராப்திஹஸ்து. :p
வாங்க பொன்முருகராஜ்,
பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா உங்க வலைப்பூவுக்கு வந்து படிக்கிறேன்.
நன்றி நாஞ்சில் நாதம் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி அம்பி
சில பேர் என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலத்தான் இருக்கும், இதெல்லாம் நம்பளப்போல யூத்துக்கு சகஜம். இதயெல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது.....
பொற்கொடிய நேர்ல பாக்கும் போது, என் பேரைச் சொல்லி ரெண்டு தர்ம அடி போடவும்...
ambi said...
//இப்படி பேசினா கேக்கறவங்களுக்கு எரிச்சலாத்தான் இருக்கும்//
ஹிஹி, அதை யார் சொல்றாங்கன்னு அதை பொறுத்தது. பொதுவா சப்பாத்திகளுக்கு இந்த 'யு நோ' இல்லாம பேச வராது. :))
ஆமா அம்பி நீங்க இப்படி சப்பாத்திங்க கூடவும் மல்லூஸ் கூடவும் எப்பவும் கடல போடுறது தங்க்ஸ்க்கு தெரியுமா?
//ஹிஹி, அதை யார் சொல்றாங்கன்னு அதை பொறுத்தது. பொதுவா சப்பாத்திகளுக்கு இந்த 'யு நோ' இல்லாம பேச வராது. :))//
enna ambi, inniku veetla pooriyame? konjam kuzhandhaiya velila kootindu ponga, naan thangamani kitta kekkanum - avanga appicela karla-kattai asamigal kitta how she will roast kadalai nu.. :D
//@கேடி, பிஞ்சு மூளையா? நேர்ல பாக்காமையா போவோம், அப்ப இருக்கு உனக்கு. :))//
enna iruku, bondava? illa kesariya? :P
//பேபி சிட்டிங்கல அடிக்கடி டயப்பர் மாத்த யோகம் பிராப்திஹஸ்து.// ennoda baby samathu! thaane maathikum! :D :D
//சில பேர் என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலத்தான் இருக்கும், இதெல்லாம் நம்பளப்போல யூத்துக்கு சகஜம்.//
hahaha enna sriram, neenga unmai thamizhan pondra "youth" thaane.. idha publicla solli thaan theriyanuma enna?
//பொற்கொடிய நேர்ல பாக்கும் போது, என் பேரைச் சொல்லி ரெண்டு தர்ம அடி போடவும்...//
enna nerla pakradhukulla unga rendu perukum thondu kizham vayasagi irukkume! aiyo paavam.. :D
என்னா பொற்கொடி
ஆபிஸ்லதான் வேல செய்யாம மொக்க பதிவுகள படிப்பீங்கன்னு பாத்தா வீட்லயும் டயப்பர் கூட மாத்தத் தெரியாதா?
நாங்கள்ளாம் யூத்து, என்ன இன்னிக்கெல்லாம் இருந்தா உங்கள விட சில மாதங்களே எனக்கு அதிகம்.
ஏன் உங்கள நேர்ல இன்னும் 60-70 வருஷத்துக்கு பாக்க முடியாதா???
Post a Comment