Tuesday, September 15, 2009

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க - பகுதி 4

பகுதி 1 பகுதி 2 பகுதி 3

பகுதி மூணுல சில வாக்கியங்களப் பாத்தோம், இந்த பகுதியில சில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு (Pronunciation)பற்றிப் பார்க்கலாம்.
ஆங்கிலம் நமக்கெல்லாம் அந்நிய மொழி (Foreign language,ஆனால் இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நிறைய பேர் ஆங்கிலமே தமது
தாய்மொழி போல் பேசுகின்றனர் - அது வேறு விஷயம்). வட்டார வழக்கில் இருக்கும் மொழியின் சாயல் பேசும் ஆங்கிலத்தில் இருக்கும். உதாரணத்துக்கு
தமிழர்கள் - Stress on D, R, Th etc, மலயாளிகள் - famous for their usage of "O", பெங்காலிகள் - B for V and vice versa.
இதனைத் தவிர்த்து வார்த்தைகளை Native Speakers of English பேசுவது போல பேசிப் பழக வேண்டும். நான் அதிகம் கேட்ட தவறான
உச்சரிப்புகளையும் அவற்றின் சரியான உச்சரிப்பையும் இங்கு பார்க்கலாம்.

1. Pronunciation - The Irony is many pronunce the word pronunciation Wrongly.. இதை பலர் ப்ரொநவுன்சியேசஷன் என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன். சரியான உச்சரிப்பு ப்ரொநன்சியேசன், PRONANSIASHAN என்று இருந்தால் எப்படி படிப்பீர்களோ அப்படி சொல்ல வேண்டும்.

2. Fixed : நம்மாளுங்க இதை சொல்வது இப்படி - ”ஃபிக்ஸட்” / FIXAD. இந்த வார்த்தையில் “E" silent.“ஃபிக்ஸ்ட்” என்பதே சரியான உச்சரிப்பு.
FIXD என்றிருந்தால் எப்படி சொல்வீர்களோ அதுவே சரியான உச்சரிப்பு.

3.Break Fast : தவறான உச்சரிப்பு - ப்ரேக் ஃபாஸ்ட். சரியான உச்சரிப்பு “ப்ரெக் ஃபஸ்ட்” - "Brek first"- இதைப் படியுங்கள் - இப்போது நீங்கள் சொல்வதே Break Fast ன் சரியான உச்சரிப்பு

4. Wednesday - தவறான உச்சரிப்பு - வெட்னெஸ்டே. சரியான உச்சரிப்பு - வென்ஸ்டே என்பதே ஆகும். Vensday என்பதைக் கூறும் போது வரும் சத்தமே Wednesday யின் சரியான உச்சரிப்பு.

5. Did not / Didn't : இதில் இரண்டாவது D silent. இதை பலர் மிக அழுத்தமாகச் சொல்லி ரொம்ப awkward ஆக ஆக்கி விடுகிறார்கள்.
”டிடிண்ட்” என்று சொல்லாதீர்கள், “டின் ட்” அதாவது "Dint" (I Dint do that) என்று மென்மையாகச் சொல்லிப் பழகுங்கள், ஆங்கிலம் அழகாக ஒலிக்கும்.

6. Receipt : இதிலும் "P" silent, இந்த எழுத்தை உச்சரிக்கூடாது, இதைப் பலர் அழுத்தமாக வேறு சொல்வார்கள், இது “ரெசிப்ட்” அல்ல, “ரெசீட்”
என்பதே சரி.

ஒரு குறிப்பு : பலருக்கு Receipt, believe ஆகிய வார்த்தைகளை எழுதும் போது “e"க்கு அப்புறம் “i” வருமா அல்லது "i"க்கு அப்புறம் “e" யா என்று குழப்பம் வரும். நன்றாகத் தெரிந்திருந்தாலும், எழுதும் போது தடுமாறும். ”Never BELIEVE A LIE" என்ற வாக்கியத்தை நியாபகத்தில் வைக்கவும்.
LIE என்ற வார்த்தையில் குழப்பம் வராது. BELIEVE இலும் அப்படியே I க்கு அப்புறம் E வரும். நம்பிக்கை (Belief) இல்லாததால்தால் ரசீது (receipt) வாங்குகிறோம், எனவே அந்த வார்த்தை மாறுபடும் (E after I). சும்மா ஒரு Spelling Tip....ஹி ஹி...

பின்னூட்டங்களில் வந்த கேள்விகளையும் இங்கே சேர்க்கிறேன்.

கண்மணியின் பின்னூட்டத்தில் இருந்து சுடப்பட்டவை

1. Film : இதை ஃபிலிம் / filim என்று சொல்லக்கூடாது, ஃபில்ம்/ FILM என்பதுதான் சரியான உச்சரிப்பு (ல க்கப்புறம் இ சவுண்ட் கிடையாது)
2. Sugar : S க்கு Sh உச்சரிப்பு வரும் மிகச்சில வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஷுகர் / shugar என்று உச்சரிக்க வேண்டும்
ஒரு famous கதை, ஒரு நாள் டீச்சர் ஒருவர் வகுப்பில் சொன்னாராம் "s" என்ற எழுத்து “sh" உச்சரிப்பு பெறும் ஒரே வார்த்தை SUGAR என்று.
மாணவர்கள் பக்கமிருந்து வந்ததாம் ஒரு குரல் “are you SURE" என்று.. இந்த இரண்டைத் தவிர வேதேனும் வார்த்தைகள் தெரிந்தால் சொல்லுங்க...

பொற்கொடி கத்துக்கொடுத்தது.

பலர் உச்சரிப்புக்கு Pronounciation உபயோகிக்கிறார்கள் என்று கூறியிருந்தேன், அதனை எங்கு உபயோகிக்க வேண்டும் என்று பொற்கொடி அழகாக
கோடியிட்டு காட்டியிருந்தார்.

pronunciation - உச்சரிப்பு, pronounciation - அறிவித்தல் - Example : The Doctor Pronounced him Dead

கண்மணிக்கும் பொற்கொடிக்கும் நன்றிகள் பல....

54 comments:

பாலா said...

Last Para: Much needed! :)

sriram said...
This comment has been removed by the author.
sriram said...

வாங்க பாலா
’’Last Para: Much needed! :)’’
நெஜமாவா சொல்றீங்க.. நாந்தான் அப்படின்னு நெனச்சேன், நீங்களுமா??
same blood

Anonymous said...

Good article. Waiting for next post

sriram said...

நன்றி அனானி நண்பரே, பேரையாவது சொல்லலாமே..
’’Waiting for next post’’ நெறய பேர் இப்படி சொல்றாங்க - இந்த் போஸ்ட் படிச்சாங்களா இல்லயான்னே தெரியல..

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல இடுகை. வாழ்த்துகள்.

sriram said...

தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ராகவன் ஜி

Anonymous said...

An informative post.. :)

வால்பையன் said...

சூப்பர் தல!

இனிமே நானும் வீட்டில் ஒன்னு ரெண்டு ஆங்கில வார்த்தை பேசி டரியலாக்கப்போறேன்!

கை கால் உடைஞ்சா புத்தூர் செலவு உங்களுது!

sriram said...

வாங்க மித்து, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

sriram said...

வாலு,
இடுகைகள்ல சொன்னது மாதிரி பேசினீங்கன்னா, உங்க நலத்துக்கு நான் பொறுப்பு, உங்க டிரேட் மார்க் குசும்ப சேத்து பேசி ஒத வாங்காதீங்க...

shortfilmindia.com said...

அருமையான முயற்சி.. நன்றி..

கேபிள்சங்கர்

sriram said...

வாங்க யூத்து
எல்லாம் உங்களப்போல உள்ளவங்க தந்த
ஊக்கத்தில தான் நானெல்லாம் எழுதறேன்..

Porkodi (பொற்கொடி) said...

ahaa.. pronounce ku inoru spellinga pronunce irukku nu inga thaan therinjudhu!

sriram, neenga thaan vivekananda spoken institute nadathravaroda vaarisa? :))

Porkodi (பொற்கொடி) said...

apapo vera padhivugalum podungalen? (long weekend ku enga poninga, or iniku enna padam pathinga, edho oru mokkai) illa indha series complete panitu thaan vera edhuvum ezhudhuvingla?

sriram said...

வாங்க பொற்கொடி
pronunciation என்பது தான் சரி.
நீங்க சொன்னதுக்காக விக்கி வாத்தியார ஒரு தபா கேட்டுப்பாத்தேன்.

"Pronunciation" refers to the way a word or a language is spoken, or the manner in which someone utters a word. If someone is said to have "correct pronunciation," then it refers to both within a particular dialect.

Pronounciation இல்ல

sriram said...

பொற்கொடி
அப்புறம் உங்களுக்கு விவேகானந்தா institute நடத்துறவர் மேல என்ன கோபம், என்னப் போயி அவருக்கு வாரிசுன்னுகிட்டு, நான் ரொம்ப சின்ன பையன்

sriram said...

பொற்கொடி
லாங் வீக்கெண்டுக்கு ஒபாமா வீட்டுக்கு முன்னால நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு வநதேன், அதெல்லாம் போட்டா, வீட்டுக்கு திருஷ்டி பொம்மைக்காச்சுன்னு சொல்லிடுவீங்க..
ஏன் ரொம்ப போர் அடிக்குதா?
Resume எழுதுவது எப்படி ஆரம்பிக்கலாமா அல்லது Interview Tips / How to write a resignation letter இவற்றில் ஒன்றை தெரிவு செய்யுங்க, எழுதறேன்.
சொந்தக் கத கேட்டே தீரணும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, உங்க தல விதிய யாரால மாத்த முடியும்

ambi said...

//சும்மா ஒரு Spelling Tip..//

Superr. Worthy and very simple to remember. :)

I catch your point. :))

//How to write a resignation letter//

LOL :))

கண்மணி/kanmani said...

Good.
What about film? Some say like filim others film.which one is correct?
Is it sugar or shugar?
On the way or on thee way?

sriram said...

வாங்க அம்பி சார்
நெஜமாவே பிடிச்சிருக்கா??
அப்புறம் நீங்க பொற்கேடின்னு எழுதறீங்களே அது சொல் குற்றமா இல்ல பொருள் குற்றமா??

sriram said...

வாங்க கண்மணி,
1. ஃபில்ம்/ FILM என்பதுதான் சரியான உச்சரிப்பு
2. ஆன் த வே / on the way தான் சரி
3. அது ஷுகர் / shugar, ஒரு famous கதை, ஒரு நாள் டீச்சர் ஒருவர் வகுப்பில் சொன்னாராம் "s" என்ற எழுத்து “sh" உச்சரிப்பு பெறும் ஒரே வார்த்தை SUGAR என்று. மாணவர்கள் பக்கமிருந்து வந்ததாம் ஒரு குரல் “are you SURE" என்று..

sriram said...

அப்புறம் அம்பி அந்த Resignation மேட்டர் சீரியஸாத்தான் சொன்னேன். பல பேர் மாமியார் செத்துப்போச்சு, I am the one responsible for it ங்கறா மாதிரி லெட்டர் எழுதறாங்க...
பேசாம ஒரு Draft எழுதிடலாம்னு பாக்கறேன்...

sriram said...

கண்மணி மேடம்,
இப்படி 3 வார்த்தைகளை பின்னூட்டத்தில் போட்டு ஒரு போஸ்ட் போடுறதுக்கு வேட்டு வெச்சிட்டீங்களே..
எனக்கெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் சொல்றாமாதிரி போஸ்ட் போடற சமத்து இன்னும் வல்ல..

rathinamuthu said...

நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் போல் தோன்றியது. பின்னூட்டத்திலே வந்தவைகளையும் (film and sugar) original post லேயும் சேர்த்து இருக்கலாம் addendum போல். பின்னூட்டத்தை பின் தொடராதவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
தவறாமல் தொடர்கிறேன் பின்னூட்டமிடவில்லையென்றாலும்.

sriram said...

வாங்க ரத்தினமுத்து,
அதயேத்தான் நானும் நினைத்தேன்,
அந்த் மூன்று வார்த்தைகளையும் பதிவில் ஒரு குறிப்புடன் சேர்த்து விடுகிறேன்.
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

Porkodi (பொற்கொடி) said...

adhu sol kutram porul kutram rendume thaan! :))

bore ellam adikalai, but, idhu padikkadha readers unga bloga marakkama irukanum illa.. adhuku sonnen! evlavo pathutom, unga sondha kadhaiya paka matoma? :D

naanum wiki poitu thaan vandhen apo. pronunciation is the actual spelling, but http://en.wiktionary.org/wiki/pronounce parunga :))

sriram said...

பொற்கொடி
1. சொல் குற்றம் / பொருள் குற்றம் - இது பத்தி அம்பி சொல்லணும், நீங்க சொல்லக் கூடாது (ஆகா நல்லா சிண்டு முடிஞ்சாச்சு - இன்னிக்கு நல்லா சாப்பாடு இறங்கும் - 2 unlimited meals ஆர்டர் பண்ணிடறேன்)
2. உங்க கருத்த அப்படியே ஏத்துக்கறேன், வேற ஏதாவது முயற்சி பண்றேன், கொடுத்த டாபிக் எதுவும் பிடிக்கலயா?
3. pronunciation - உச்சரிப்பு, pronounciation - அறிவித்தல் - The Doctor Pronounced him Dead, இப்போ சரியா வருதா... (இதயும் பதிவில் சேக்கறேன்)

ஷைலஜா said...

இப்பதான் பாக்கறேன்
படிச்சிட்டு பின்னூட்டமிடறேன் ஸ்ரீ

Porkodi (பொற்கொடி) said...

enna kelvi idhu, neenga endha topicla venalum podunga, epdiyum padikkama thaane thuppa porom? :P

ஷைலஜா said...

சும்மா சொல்லக்கூடாது ஸ்ரீ

இந்தப்பதிவு நிஜம்ம்மாவே(தமிழ்ல இப்படி 2ம் அதிகம் போட்டா அடிச்சி சொல்றதா அர்த்தம் அழகா தமிழ்பேசலாம் வாங்க:))) உபயோகமான ஒன்று. அதிலும் 4, 5, 6...அசத்தல்! தேவையானதும் கூட. தொடருங்க.... மறந்துட்டேனே பொற்கொடிக்கும் கண்மணிக்கும் சிறப்புப்பாராட்டுக்கள்!
பொன்னே மணியேன்னு வாழ்த்தறேன் அவங்களையும்!

Porkodi (பொற்கொடி) said...

kummi adikalame nu vandha en peraiyum kutravaligal listla sethutinga? enna koduma saravana naan kood aurupadiya edho sollitena???! avvvv... irunga kanna thodachikaren..

shylaja, idhukke kanne maniye nu konjuvingla.. adada unga veetla naan porandhurkanum :((((

Porkodi (பொற்கொடி) said...

aaah ayiyo.. yaaravadhu odiyanglen!! shylaja madam blog kaanom!!! pona vaaram kooda pathene?? 1-2 comment kooda potene? enna kekkama epdi thookininga? yen thookininga? edhuku thookininga? yaar thookininga? X-(

sriram said...

பொற்கொடி
அப்போ இவ்வளவு நாள் போஸ்ட்ட படிக்கவே இல்லயா.. அவ்வ்வ்வ்வ்வ்

sriram said...

நன்றி ஷைலஜாக்கா, தன்யனானேன்..

sriram said...

பொற்கொடி, இதென்ன சின்னபுள்ளயாட்டம் அழுதுகிட்டு...
cheer up...

sriram said...

அலோ பொற்கொடி ஏனிந்த கூச்சல்..
ஷைலஜா பிளாக்க எந்த காக்காவும் தூக்கிட்டி போகல
http://shylajan.blogspot.com/
பத்திரமா இருக்கு.
உங்க கமெண்ட் போட்டவுடனே தாங்காம தானே டெலீட் ஆகி இருக்கும், நான் கமெண்ட் போட நினச்ச உடனே திரும்ப வந்திடுச்சு

Porkodi (பொற்கொடி) said...

naatamai, mudhalla indha commentsla madam profile click panni parunga.. anga illaiye! enna solromne theriyaama sombai thookitu vandhuda vendiyadhu theerpu solla.. :)))

sriram said...

பொற்கேடின்னு அம்பி கரெக்டாத்தான் சொன்னார்.
பிளாக் பேர உலாவில டைப்பி பாக்க வேண்டியது தானே..
அத்த விட்டுபுட்டு சின்ன புள்ள மாதிரி ஊரக் கூட்டுறது..
வேணா பிளாக்க காணலேன்னு 911க்கு ஒரு போன் போடுங்களேன்...

ராஜ நடராஜன் said...

ஆங்கிலம் புகாத நாக்குக்கு முதலில் ஆங்கில வாக்கியங்கள் சொல்லித் தந்தவை பெரும்பாலும் தமிழ் பத்திரிகைகளும் வார இதழ்களும்.நீங்கள் இடுகையில் சுட்டியபடிதான் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் உச்சரிப்புதான் தட்டச்சு கோப்பார்கள்.யாரு கண்டா ஃபில்ம் (Film)ன்னு உச்சரிக்கனுமின்னு. ரமேஷ் நண்பனிடம் "சும்மா பிலிம் காட்டாத மச்சி" என்றான் என்று படிக்கும் போது பிலிம் வந்து நாக்குல ஒட்டிக் கொள்ளும்.அதப் படிச்சிட்டு படிக்காத இன்னொருத்தங்கிட்ட புருடா விட்டா அவனும் அதனைப் புடிச்சுக்குவான்.இப்படி தொத்திக்கும் இந்த சொல் வியாதி.நீங்கள் குறிப்பிட்டதுக்கும் மேலே எக்கச்சக்க சரக்கு தமிழர்களின் நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இதுவும் பரவாயில்லையிங்க!ஆனால் ஒண்ணே கால் ஆங்கிலம் முக்கால் தமிழ் கலவை தங்கிலிஷ தொலைக்காட்சியில் கேட்கும் போது கடுப்பு வரும் பாருங்க.(தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கு பின்னூட்டம் வைக்க மாட்டேங்குறாங்குளே:( அதுவும் வின் தொலைக்காட்சியில் ஒருத்தரு கல்வி பற்றிய கோட்டு சூட்டு! (தெரிந்தே)போட்டு சொல்லித் தருகிறார் பாருங்க!ஒண்ணே கால் முக்கால் கலவை நல்லாவே கலக்குறார்.

தேவையான இடுகை.நன்றி சொல்லி சோடா குடித்துக் கொள்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

போகலாமுன்னு கதவுப் பக்கம் வந்தா பொற்கொடி நின்னு என்னமோ முணுமுணுத்துகிட்டு இருக்காங்க!பத்திரிகை காலத்தில் தட்டச்சு கோப்பில் வந்த ஆங்கில உச்சரிப்புக்கு இணையா இப்ப இணையத்தில் தமிழில் நினைப்பதை ஆங்கிலத்தில் தட்டுவது.யூனிகோடுகள்தான் நிறையவே வந்து விட்டனவே.தமிழில் பின்னூட்டம் சொல்லலாமே!முடியாவிட்டால் ஹாலிவுட் பாலா மாதிரி தட்டலாமே!

இன்னொரு தங்கிலிஷ் கண்ணில் தென்படுவதற்குள் எஸ்கேப்:)

sriram said...

வாங்க ராஜ நடராஜன்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமா அந்த மாதிரி நாக்கில் ஒட்டிய்ருக்கும் சிலவற்றைத்தான் பிச்சி எடுக்க முயற்சி பண்ணியிருக்கேன். முயற்சி தொடரும்.
விண் டிவி பார்ப்பதில்லை. விஜயில் வரும் நீயா நானா பார்ப்பதுண்டு, தப்பாவாவது ஆங்கிலம் பேசுவேன் ஆனா
சரியா தமிழில் பேச மாட்டேனு அடம் பிடிக்குதுங்க...என்ன செய்யறது.

அப்புறம், பொற்கொடி நீங்க நினைக்கிறா மாதிரி இல்லீங்க, ஆபீஸ் கம்புயூட்டரில் தமிழெழுத்துக்கள் இல்லை, அதனால் தான் அப்படி, மத்தபடி தமிழில் டைப்புவதில் ஒர் வல்லுனி (சும்மா வல்லுனருக்கு பெண்பால் எழுதிப்பார்த்தேன், இதுக்கு எனக்கு இருக்கு)
அடிக்கடி வாங்க ராஜ நடராஜன்

கண்மணி/kanmani said...

ஸ்ரீராம் நம்ம மக்களுக்கு ஏதாச்சும் சொல்லிக் கொடுக்க வந்தா இது பெரிய இதுன்னு கெளம்பிட்டுது னு கமெண்ட் வரும்.
இருந்தும் தளராம எழுதுங்க.
இங்கே யாருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பதில்லை.நீங்க வெளி நாட்டில் இருப்பதால் உங்க உச்சரிப்பு அனுபவங்களைச் சொல்றீங்க.
எங்களுக்கும் சந்தேகம் தீரும்.
த அல்லது தி [the]உச்சரிப்புக்கு தனி பதிவு வேனுமானால் போடுங்க:))
ஷிவன்,ஷுகர்,பர்டே[பர்த்டே],பி.எட்[பிஇடி][B.Ed]இப்படி நிறைய இருக்கு

sriram said...

கண்மணி,
அதெல்லாம் பாத்தா வேலைக்காவுது.
எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும், முக்கியமாக இந்தியர்களுக்கு, நான் எங்கேயும் ஆங்கிலம் கத்துத் தரேன்னு சொல்லல, ஆங்கிலத்தை அழகாப் பேசலாம்முன்னு தான் சொல்றேன். இதுக்கும் யாராவது ஏதாவது சொன்னால் அது பற்றி எனக்கு கவலையில்லை.
பல பேர் நல்லா இருக்குன்னு சொல்றாங்க (நீங்க உள்பட), நானும் கத்துக்கறேன் (ex - பொற்கொடி சொன்ன Pronounciation), Period.

இதற்கும் நான் அமெரிக்காவில் இருப்பதற்கும் சம்பந்தமில்லை, இதெல்லாம் நான் இந்தியாவில் இருந்த போது கத்துக்கிட்டது. நான் அமெரிக்க உச்சரிப்பு பத்தி இதுவரை எதுவும் எழுதவில்லை.
எடுகேஷன் (education), மல்டை (Multi), செமை (Semi) உச்சரிப்பு எல்லோருக்கும் பொதுவல்ல, வேணும்னா பின்னால அமெரிக்கன் உச்சரிப்பு பத்தி எழுதறேன்.

ஷைலஜா said...

//Porkodi (பொற்கொடி) said...
aaah ayiyo.. yaaravadhu odiyanglen!! shylaja madam blog kaanom!!! pona vaaram kooda pathene?? 1-2 comment kooda potene? enna kekkama epdi thookininga? yen thookininga? edhuku thookininga? yaar thookininga? X-(

September 16, 2009
.....//

பொற்கொடி உங்க அன்பு புல்லரிக்கிறது அக்கறை மெய்சிலிர்க்கவைக்கிறது! என்வலையை இப்படியும் கண்டுகொள்கிறார்கள் என்பதில் 200கிராம் எடையும் ஏறிட்டது:)(அம்பி! சரிசரி சிரிக்காதீங்க:))
நான் 2ஐடில பின்னூட்டங்கள் இட்டுடறேன் அதான் குழப்பம்
ஸ்ரீராமர் சொன்ன வழிலபோங்க எல்லாம் கரெக்டா நடக்கும்:)

Porkodi (பொற்கொடி) said...

Aiya Raja.Natarajan, thalaivar sriram sonnadhu thaan karanam. naan morning 8 ku vandhu night 11 ku poitruken veetuku konja naala, inum konja nalaiku apdi thaan.. idhula enga irundhu thamizh font irakki veetla ukkandhu adikka? :-(

Porkodi (பொற்கொடி) said...

sari shylaja madam, apdiye vandhudaren! :) ivlo pasam vechurken, konjam sothula (soru illai, sothu- property hihi) pangu kidaikuma?

Porkodi (பொற்கொடி) said...

Oh, Natarajan, Hollywood Bala madhri thattalame nu sonnadhuku -

I did try that way for some time, didn't work out as much: either many didn't get exactly what I was trying to convey (not that they didn't know english), may be, because it takes more time to read and comrepehend english than tamil/thanglish..

Ennoda commentayum kooda 4 peru padikranga polarukke! romba gujaala keedhu!

Porkodi (பொற்கொடி) said...

evalavo panitom..

Porkodi (பொற்கொடி) said...

idha panna matoma? 50 :)

பாசகி said...

கலக்கறீங்க ஜி.

//How to write a resignation letter//

அதான் அங்கங்க அவங்களே வீட்டுக்கு அனுப்பிட்டு இருக்காங்களே :)

//இன்னிக்கு நல்லா சாப்பாடு இறங்கும் - 2 unlimited meals ஆர்டர் பண்ணிடறேன்)//

ஏங்க அதுதான் unlimited meals ஆச்சே, அப்புறம் எதுக்கு ரெண்டு. துணைக்கு யாரையும் கூட்டிட்டு போவிங்களோ :)

sriram said...

நன்றி பாசகிஜி (பாத்தீங்களா, நான் பேரை கரெக்டா சொல்லிட்டேன், டுபுக்கு அண்ணன் மாதிரி இல்லாம)

//அதான் அங்கங்க அவங்களே வீட்டுக்கு அனுப்பிட்டு இருக்காங்களே :)//
அப்போ Firing letter எப்படி எழுதணும்னு சொல்லவா??

அப்புறம் யாராவது ரெண்டு பேருக்குள்ள மூட்டி விட்டா வர்ற சந்தோசஷத்தில 2 unlimited meals சாப்பிடுற அளவுக்கு சோறு இறங்கும்.
:):) பாத்தீங்களா ஸ்மைலியும் இரண்டு

பாசகி said...

//(பாத்தீங்களா, நான் பேரை கரெக்டா சொல்லிட்டேன், டுபுக்கு அண்ணன் மாதிரி இல்லாம)//

அண்ணன் கரெக்ட்டா தான் சொல்லுவாரு. இந்த பொற்கொடி மேடம்-தான் போட்டு கொதறி எடுக்கறாங்க :)

பி.கு: இந்த பின்னூட்டத்தை அவங்க பாக்க மாட்டங்களே? எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான் :)

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

\\risit\\ ரிசிட் எnபதெ சரி.
கார்த்திக்+ அம்மா