Saturday, December 11, 2010

நன்றி நண்பர்களே:

கடந்த ஏழு நாட்களாக என்னை தமிழ்மண முகப்பில் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பளித்த தமிழ் மண நிர்வாகிகளுக்கும் முக்கியமாக சங்கர பாண்டி ஐயாவுக்கும் மிக்க நன்றி.

டிசம்பர் 12 - தமிழ் நாட்டின் இரண்டாம் தீபாவளி - ரஜினியின் பிறந்த நாள். கமல் ரசிகனான எனக்கு இத்தினம் வேறு வகையில் முக்கியமானது. இன்று எங்களுடைய பதினோறாவது
ஆண்டு மணநாள்.

ஒரே ஒரு வாரம் என் மூஞ்சியை பொறுத்துக் கொள்ளுவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை உங்கள் மூலமாக உணர்ந்தபின், பதினைந்து வருடமாய் பின் தூங்கி முன் எழுந்து சகித்துக் கொண்டிருக்கும் என் சகதர்மினிக்கு இந்த பதிவில் நன்றி சொல்வது என் தலயாய கடமையாய் உணர்கிறேன். ஒரு வார கஷ்டத்தை அனுபவித்த நீங்களும் ஆட்சேபனை ஏதும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். (நஞ்சப்பா...கடேசி பெஞ்சுல ஒராள் ஆட்சேபணையா புருவத்த சுருக்கறான் பாரு..அமுக்கிப் போடேய்)

சகதர்மினி, அவர், இவர், நன்றி என்றெல்லாம் கூவுவது எனக்கே ரொம்ப அன்னியப்பட்டாலும், மைக் பிடித்தால் கடமை தவறா மோகன் பரம்பரை என்ற வகையில்...பாஸ்டன் கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்... (அவர் இவர்ன்னு கூப்பிட்டா அடுத்த வூட்டு அம்மணியைக் கூப்பிடுற மாதிரி இருக்கு என்பதால் அவள் இவள்ன்னே செல்லமாய் கூப்பிடுக்கிறேன். பெண்ணியவாதிகள் ஓரமா குந்திகினு ஜோடா குடிங்கப்பா ப்ளீஸ்)

முதல் நன்றி பதினஞ்சு வருசத்துக்கு முன்ன சொன்ன காதலை ஏத்துக்கிட்டு, சரித்திரத்தில் நானும் ரவுடி என்று பதிவு செய்ய உதவியதற்காக.

அடுத்த நன்றி அடுத்த நாலு வருசத்தில் போட்ட சண்டைகளில் விட்டுக் குடுத்த மாதிரி நடித்து நான் பெரிய தாதா என்று அதே சரித்திரத்தை திருத்தி எழுதியதற்காக.

அப்பாலிக்கா கல்யாணத்துக்கும், அதுக்கும் மேல பதினோரு வருசமா என்னைப் பொறுத்துக் கொண்டதுக்கும், சென்னையை விட்டு வெளியே போக மாட்டேன் என கிணற்றுத் தவளையாக
இருந்த என்னை தில்லி ஆஃபரை எடுத்துக்கச் சொன்னதுக்கும்,என்னை அமெரிக்கா அழைத்து வந்ததுக்கும் அப்படின்னு ஒவ்வொண்ணுக்கா அவளுக்கு நன்றி சொல்லணும்னா, இன்னும்
ஒரு மூனு வாரம் நான் மட்டுமே தமிழ்மண ஸ்டாராக ஓட்டவேண்டியிருக்கும். (சங்கர பாண்டி ஐய்யா அப்பிடியே ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டார் அவ்வ்வ்வ்)

நான் இதுவரை எடுத்த முடிவுகளிலேயே மிகச்சிறந்த முடிவுகள் இரண்டு, ஒன்று என் இன்றைய மனைவியை 15 வருஷத்துக்கு முன்னர் காதலியாக்கிக் கொண்டது மற்றது 2002 இல் புதுதில்லிக்கு சென்றது. 'comfort zone'-ஐ விட்டு வெளியே வந்தால் தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரியும். "A ship is safe in harbor, but that's not what ships are for"ன்னு சும்மாவா சோக்கா சொன்னாங்க? நானும் என்னுடைய 'comfort zone'-ஐ விட்டு வந்தப்புறம்தான் என்னுள் பலப்பல மாற்றங்கள். நான் அன்று தயங்கிய போது என் மனைவி மட்டும் "போய்த்தான் பாக்கலாமே"ன்னு சொல்லாமல் இருந்திருந்தா இன்று நாங்கள் பல விசயங்களை அடைந்திருக்கவே முடியாது.

புதுதில்லியில் இருக்கும் போது ஒரு நாள் நான் திடீரென்று "வேலையை விட்டு விட்டு பிசினஸ் செய்யப்போறே"ன்னு சொன்ன போது அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. சில
மாதங்களுக்குப் பிறகு "Business is not my cup of tea, I am getting back to work"ன்னு சொன்னபோதும் ஒன்றும் சொல்லலை. வேறொருவராய் இருந்தால் "நான் அன்னிக்கே சொன்னேனே கேட்டானா பாவி மனுஷன் "- பாட்டு ஆரம்பமாகியிருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சில ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு பண உதவி செய்யவேண்டும் என்பது என் கனவு. அது பற்றி சொன்ன போது "எவ்வளவு பணம் குடுக்கப் போற?...எப்படி..?"
என்றெல்லாம் மருந்துக்கு கூட கேட்கவில்லை. இப்போதும் நான் என் குடும்பத்தாருக்கு பணமோ / கிப்ஃடோ குடுக்கும் போது "இவ்வளவுதான் குடுக்கப் போறியா, அவங்களுக்கு இது
போதுமான்னு கேட்டியா - வேணும்னா இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே" என்பதைத் தவிர வேறு தர்க்கம் ஏதுவும் அவர் செய்து கேட்டறியேன். எத்தனை பேர் மாமியாருக்கும்
நாத்தனாருக்கும் கணவன் பணம் கொடுக்கும் போது இப்படி சொல்வார்கள் என்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களுக்கு பல தடவை பண உதவி செய்து சில சமயம் நஷ்டப்
பட்ட போதும் கூட இன்றளவில் நான் செய்யும் உதவிகளை அவர் ஆட்சேபித்து ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதற்கெல்லாம் மேல் அவருக்கு அமெரிக்காவிற்கு ட்ரான்ஸ்பர் ஆகிய போது, நானும் எல்2 விசாவில் அவர் கூடவே வந்து இங்கு வேலை தேடிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.
வந்த அடுத்த மாதமே எனக்கு வேலை கிட்டியதென்றாலும், அந்த முப்பது நாளும் நான் சம்பாதிக்கவில்லையே என்று கவலைப் பட்டுவிடக்கூடாதே என்று அவர் கையில் இருந்த பணம் எல்லாவற்றையும் என் கையில் குடுத்து, வங்கிக் கணக்கின் ஆன்லைன் ஆப்ரேஷனையும் என்வசம் ஒப்படைத்து, அவர் செலவுக்குக் கூட என்னிடம் பணம் வாங்கிச்சென்ற அவரின் அன்பையும், பாசத்தையும் நினைத்து நெகிழ்ச்சியோடு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

என்னுலகத்தில் அவள் ஒரு முக்கிய அங்கம், அவளுக்கு உலகமே நான் தான். இப்பேற்பட்ட பெருமையை அளித்த அவளுக்கு இந்நன்னாளில் என் வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த நட்சத்திர வாரம் என் மணநாளில் முடியுமாறு வாய்ப்பை வழங்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும், ஊக்கமளித்த உங்களுக்கும் நன்றி..

அடுத்து வரும் தமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி உங்களிடமிருந்து "என்றும் அன்புடன்" விடை பெறுகிறேன் நண்பர்களே...

மழை - சிறுகதை

நாலு நாளா பெஞ்ச மழையில சென்னை ஒரே வெள்ளக் காடா இருந்தது. எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.

"அதெல்லாம் இல்ல மல்லிகா! நம்ம ரோட்டில அவ்வளவா தண்ணி நிக்கல.. வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி கிடக்கு. இன்னிக்கு லீவ் போடாம வந்துட்டு போயிடு!"

".."

"என்ன சின்னக் குழந்தையா? பெரியவன் சரவணனுக்கு லீவ் தானே! அவன ரெண்டு மணிநேரம் பாத்துக்கச் சொல்லிட்டு வந்துரு மல்லிகா. அத்தனை பாத்திரம் கிடக்கு! துணி தோய்க்கணும், வெள்ளிக்கிழமை வீட்டையும் கண்டிப்பா தொடைக்கணும். என்னை கூட லீவு போடாம ஆபிஸ் வரச் சொல்லிட்டாங்க. சீக்கிரமா வந்துரு மல்லிகா.. "

".."

"இதுக்குத்தான் செல்போன் வச்சிருக்குற வேலைக்காரியெல்லாம் வேணாம்னு சொன்னேன், நீங்கதான் ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யுற ப்யூனின் சம்சாரம்னு சொல்லி வேலைக்கு வச்சீங்க!!" என்று புலம்பிய படியே செல்போனை கீழே வைத்தாள் அனுசுயா. டாக்டர் கேசவன் பிறந்ததே ஹிந்து பேப்பர் படிக்கத்தான் என்பது போல அதில் மூழ்கி இருந்தார்.

"ஏதாவது காதில வாங்கினாத்தானே" என்றவாறே புலம்பலைத் தொடர்ந்தாள்.. " குடிசை ஒழுகுது, குழந்தைக்கு உடம்பு சரியில்ல,பெரிய பையனுக்கு லீவுன்னு மட்டம் போடறதுக்கு எக்கச்சக்க சாக்கு!! கண்டிப்பா சொல்லிட்டேன் வேலைக்கு வந்தே ஆகணும்னு!" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். கம்புயூட்டர் கேம்ஸில் ஆழ்ந்திருந்த வைகுந்த் ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

"இப்போ தானேம்மா ஆபிஸுக்கு போன் பண்ணி லீவ் சொன்னே அதுக்குள்ள மல்லிகா ஆண்டிகிட்ட வேலைக்குப் போகணும்னு சொல்றியே என்ன ஆச்சுமா?"

"அதெல்லாம் உனக்குப் புரியாது வைகுந்த்! வேலைக்காரிக்கெல்லாம் ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது, இரு உனக்கு காம்ப்ளான் கொண்டு வர்றேன், குடிச்சிட்டு கம்புயூட்டர் கேம்ஸ் விளையாடு" என்று சொல்லிக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். அங்க பாத்தா வைகுந்த் கேமை மூடி வச்சிட்டு ரெயின் கோட்டை மாட்டிக் கொண்டு இருந்தான்.

"எங்கடா கிளம்புற? வெளியில தண்ணி வெள்ளமா ஓடுது! அதுல போனா ஜுரம் வந்திடும் ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே விளையாடு."

"இதே மழையும் தண்ணியும் மல்லிகா ஆண்டிக்கும் அவங்க பசங்களுக்கும் உண்டு தானேம்மா? நீ வேற சின்ன பாப்பாவையும் சரவணனையும் வீட்ல தனியா விட்டுட்டு ஆண்டியை வேலைக்கு வரச் சொல்லிட்ட! சரவணனுக்கும் என் வயசு தானேம்மா ஆகுது? அவன் மட்டும் எப்படிம்மா தனியா சின்ன பாப்பாவைப் பாத்துப்பான், நான் போயி ஆண்டிய இங்க அனுப்பறேன். அவங்க வேலை செஞ்சு முடிச்சு வர்ற வரைக்கும் நானும் சரவணனும் சின்ன பாப்பாவோட விளையாடிக்கிட்டு இருக்கோம், போற வழியில் பாப்பாவுக்கு ஒரு சிரப் பாட்டிலும் வாங்கிட்டு போறேன். நீதானம்மா பொய் சொன்னா உம்மாச்சி கண்ணைக் குத்திடும்னு சொல்லித் தந்திருக்க. இப்ப நீயே பொய் சொல்லியிருக்க, நான் போயி சரவணனுக்கு ஹெல்ப் பண்ணா சாமி உன் கண்ணை குத்தாதில்ல..?"

ஒரு கணத்தில் பத்தே வயதான வைகுந்த் அனுசுயாவுக்கு ஞானியாகத் தெரிந்தான். அடுத்த நிமிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள் அனுசுயா.

"ஆமாம் மல்லிகா நாந்தான் பேசறேன், இல்ல இல்ல ஆபிஸுக்கு மறுபடியும் போன் பண்ணி லீவ் சொல்லிட்டேன், நீ ஏதாவது
வண்டி பிடிச்சு சரவணனையும், சின்ன பாப்பாவையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திடு, ஐயா டாக்டர்தானே பாப்பாவை அவரிடம் இங்கேயே காட்டி மருந்து கொடுத்திடலாம்! நீ வேலையெல்லாம் முடிக்கறதுக்குள்ள நான் சமையலை முடிச்சிடறேன். நீங்க இங்கேயே சாப்பிட்டுக்கலாம், நீ பாவம் ஒழுகுற குடிசையில என்ன சமைக்க முடியும்? வைகுந்தும்,சரவணனும் சாயங்காலம்
வரைக்கும் விளையாடிக்கிட்டு இருக்கட்டும், அப்புறமா நிங்க வீட்டுக்குப் போய்க்கலாம்.."

மறுமுனையில் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள் மல்லிகா.


டிஸ்கி : மொதோ முறையா கதை மாதிரி ஒண்ணு எழுத முயன்றிருக்கிறேன்.கேவலமா இருக்கா ரொம்பக் கேவலமா இருக்கான்னு சொன்னீங்கன்னா அடுத்த முறை ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

Friday, December 10, 2010

கம்பெனியை காதலிக்கணுமா? ஒரு விவாதம்

பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ அமெரிக்கவில் பிடிக்காத பத்து இடுகையில் ஒரு கருத்தைச் சொன்னார். இதோ அந்தப் பின்னூட்டம்

//எவ்வளவுதான் சம்பளம், சலுகைகள் கொடுத்தாலும் ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனம் மீது ஒரு பந்தம், பாசம் இருக்காது.நம் ஊரில் மாதம் 5000 சம்பளம் வாங்கும் ஊழியர் கூட முதலில் தன நிறுவன நலனை பார்ப்பார் பின்பே தன சுய நலம் கருதுவார். ஆனால் அமெரிக்காவில் நேர் எதிர் போக்கு//

இதுக்கு அப்பதிவிலேயே பதில் சொல்ல ஆரம்பிச்சேன். அப்புறம் இதுபத்தி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதாலும் இது குறித்தான பிறரின் கருத்துகக்ளையும்
அறிய வேண்டும் என்பதாலும் ஒரு தனி இடுகையா எழுதறேன். பல நேரங்களில் இது பத்தி விவாதிக்க வேணும்னு நினைப்பேன்.இப்பத்தான் நேரம் கூடி வந்திருக்கு.

வேலை செய்யும் நிறுவனத்தின் மீது பந்தம் பாசம் எல்லாம் தேவையா? இது நீயா நானாவில் விவாதிக்க நல்ல தலைப்பு. சின்ன லெவலில் என் தளத்தில் விவாதிக்கலாம்.

நான் பார்த்த வரையில் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். கம்பெனிக்காக என் உயிரையே கொடுப்பேன் என்றெல்லாம் சொல்வார்கள். பலவருஷம் வேலை செய்வதையும் பிணைப்பையும் இணைத்துப் பேசுவார்கள். என்னைப் பொருத்த மட்டில் இதெல்லாம் தேவையில்லை.

என்னோட கருத்துக்களை முன் வைக்கிறேன், உங்க கருத்துக்களை எதிர் பார்க்கிறேன். முக்கியமா, இனியவன் உலக்ஸ் அவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன். நான் அறிந்த அளவில் அவர் வேலை செய்யும் கம்பெனியோடு ரொம்ப அட்டாச்டு. வேற ரொம்ப நல்ல Opportunity வந்த போதும் நிறுவனத்தை விட்டு விலகாதவர், திடீரென்று போன் பண்ணி மலேசியாவிலிருந்து இந்தியா வாங்கன்னு டீ குடிக்க கூப்பிடறா மாதிரி கூப்பிட்டாலும் வீட்டுக்கே போகாமல் நேரா சென்னை வரும் அளவுக்கு கம்பெனியை காதலிப்பவர். அவர் கருத்தை அறிய ஆவல்.

My Views about Job and its importance in your life:



வேலை செய்யும் கம்பெனிக்கு உண்மையா, நேர்மையா இருக்கணும் அதுக்காக கம்பெனியை காதலிப்பதோ அல்லது குடும்பத்துக்கு முன்னர் வேலையை வைப்பது சரியல்ல. நெறய இந்தியர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரமில்லாமல் வேலையோடு ஒன்றியிருப்பதைக் காண்கிறேன். ஒரு மேனேஜர் என்ற வகையிலும் நான் எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது திறமையான, நேர்மையான,கம்பெனியின் பணத்தைக் களவாடாத, கம்பெனிக்கு வர வேண்டிய லாபத்தை தனதாக்கிக் கொள்ளாத Employee தானே தவிர கம்பெனியைக் காதலிப்பவரை அல்ல. என் டீமில் வேலை செய்த நண்பர்களுக்கு வேறு நல்ல வாய்ப்புகள் கிடைத்த போது சந்தோஷமாக அனுப்பி வைத்தேன். அவங்க இன்னிக்கும் சென்னையிலிருந்தும் மும்பையிலிருந்தும் துபாயிலிருந்தும் Career Guidance கேட்டுத் தொடர்பு கொள்கிறார்கள். என் டீமில் தில்லியில் வேலை செய்த ஒருவருக்கு விப்ரோ மும்பையில் வேலை கிடைத்த போது சேருமாறு அறிவுருத்தி அனுப்பிவைத்தேன். நான் அவரின் Reporting Manager ஆக இருந்தாலும் நான் Rational ஆக
முடிவெடுப்பேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் அறிவுரை கேட்டார். அதே நண்பர் பின்னர் ஒருநாள் விப்ரோவிலிருந்து வேறொரு கம்பெனிக்கு மாறட்டுமா என்று கேட்ட போது
வேண்டாமெனத் தடுத்தேன். ரெண்டு நிகழ்விலும் SWOT Analysis தான் முடிவு செய்ததே தவிர கம்பெனி மீதான காதல் அல்ல.


An Organization is any day bigger than an Individual.If Dhirubai Ambani is replaceable in Reliance and if Narayanamurthy is replaceable in Infosys, No one is indispensible in any organization. But Anil and Mukesh can never replace their father.

என்னைப் பொருத்தவரையில் ஒருவர் நல்லா வேலை செய்யும் வரையில் கம்பெனி அவரை வைத்துக் கொள்ளும். வேலை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டாலோ, கம்பெனியின் நிதி
நிலைமை சரியா இல்லாமல் போனாலோ அவ்வளவு ஏன் கம்பெனியின் நிர்வாகம் மாறினாலும் அவரை வேலையை விட்டு அனுப்ப ஒரு கணம் கூட தயங்காது. அப்படி இருக்கையில்
Employee மட்டும் ஏன் நிறுவனத்தின் மீது காதல் கொள்ள வேண்டும்?

"Love your profession but never fall in love with your company" இது நாராயண மூர்த்தி அவர்கள் சொன்னதாக வெளிவந்தது. அவர் என்ன அர்த்ததில் இதைச் சொன்னாரெனத் தெரியாது. என்னளவில் இதுக்கு அர்த்தம் - Job Satisfaction மற்றும் சம்பளம் ரெண்டும் சரி விகிததில் இருக்கும் வரை வேலை செய். இது மாறும் போது வேறு வேலை தேடு. சில வேலைகளில் சந்தோஷம் அதிகமாகவும் சம்பளம் குறைவாகவும் சில வேலைகளில் இது மாறியும் இருக்கும், Trade-off நீங்கதான் முடிவு செய்யணும். உங்கள் மீதும் செய்யும் வேலையின் மீதும் (Profession) காதல் கொள்ளுங்கள். நிறுவனத்தின் மீதல்ல. எண்ணங்களும் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேவ்வேறாக இருந்தால் (Yours and company's) வேறு வேலை தேடுவது நலம்.


“It is not the employer who pays the wages. Employers only handle the money. It is the customer who pays the wages.”
இது ஹென்றி ஃபோர்ட் சொன்னது. நெறய பேர் முதலாளி சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்கள். கஸ்டமர்கள் வாங்குவது குறைந்து பண வரவு குறைந்தால் முதலாளி
சொந்தப் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்க மாட்டர், ஆட்குறைப்புதான் செய்வார். நிலைமை இப்படி இருக்கையில் நாம் மட்டும் ஏன் வேலையைக் காதலித்து நல்ல வாய்ப்புகளை விட வேண்டும்?

அதே போல பணத்தின் பின்னால் ஓவரா அலைந்து வாழ்க்கையை அனுபவிக்காமல் விடுதலும் தவறே. There is no point in being the richest man in the grave yard, you cannot do any business from there - இது புரிஞ்சா போதும். Work - Family Balance தன்னால வரும்.

அம்புட்டுதேன் நம்ம கருத்து, ஒரு நல்ல விவாதத்தைத் துவக்கி வைத்த நண்பர் ராம்ஜி யாஹூ வுக்கு நன்றி.

Thursday, December 9, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை : பகுதி 8

முந்தைய பகுதிகள்

ஒரு நல்ல சேதி மற்றும் ஒரு எச்சரிக்கை

தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நீங்க எல்லாரும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி.


கனவு தேசம் தொடரின் இப்பகுதியில் தற்போதைய நிலையில் இருக்கு ஒரு நல்ல விசயத்தையும் ஒரு பிரச்சனைக்குறிய விசயத்தையும் பாக்கலாம்

மொதல்ல நல்ல விசயம். அமெரிக்காவில் IT Contracting Job Market இப்போ ரொம்ப நல்லா இருக்கு. கடந்த அஞ்சு ஆறு மாசமாகவே நெறய காண்ட்ராக்டிங் வேலை வாய்ப்புகள் அதிகமாகிக்கிட்டு இருந்து வருது. Recession க்கு அப்புறம் பொதுவா கம்பெனிகள் Full Time ஆட்களை வேலைக்கு எடுப்பதை விட Temporary Staffing
என்று சொல்லப்படும் Contracting Resources களை வேலைக்கு அமர்த்துவது வழக்கமே.

2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) முன்னேற்றத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. மூன்றாம் காலாண்டில் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. 2009ம் மூன்றாம் காலாண்டை விட 2010ன் மூன்றாம் காலாண்டில் 15 சதவீதம் அதிக வேலை வாய்ப்புகள் வந்துள்ளன. அதிக அளவில் டெக்னாலஜி கம்பெனிகள் அமைந்துள்ள கலிபோர்னியாவில் அதிக அளவு Recruitment நடந்திருக்கு.

இடங்களைப் பொருத்த வரையில் இதில் டாப் டென் இடங்களைப் பெற்ற இடங்கள் - கலிஃபோரினியா, நியூ ஜெர்ஸி, நியூ யார்க், டெக்ஸாஸ், இல்லினாய்ஸ், பென்சில்வேனியா,
வர்ஜினியா, ஜார்ஜியா, Massachusetts (அதாங்க எங்க ஊரு -இத தமிழ்ல எழுதுறது ரொம்ம்ப கஷ்டம்), மற்றும் ஃப்ளோரிடா.


டெக்னாலஜியைப் பொருத்த முறை, ஜாவா Requirements அதிக அளவில் வந்திருக்கு - 14 சதவீதம், அடுத்த ஹாட் டெக்னாலஜி Dotnet - 10%. SAP க்கும் System Admin க்கும் இதே அளவில் (10%) வேலை வாய்ப்புகள் வந்திருக்கு. QA - 8%, Data Warehousing / ETL - 7%, Oracle Apps- 5%, ப்ராஜக்ட் மேனேஜர் - 5%, Reporting Tools - 5%, Database Developers - 5%, Business Analysts - 4%, DBA = 4%, Web / Internet - 3%, People Soft - 3%, Siebel - 2%, Mainframe - 1%, Middleware - 1%, C and C++ - 1%, Mobile Applications - 1% மற்றும் Unix - 1% என்கிற விகிதங்களில் Requirement வந்துள்ளன.

ஒரு விசயம் ரொம்பத் தெளிவாத் தெரியுது. ஜாவா, Dotnet, Oracle போன்ற டெவலப்மென்ட் டெக்னாலஜிக்கும் சிஸ்டம் அட்மின்களுக்கும் இப்போதைய மார்க்கெட் நிலவரத்தில் அதிக டிமாண்ட் இருக்கு. இந்த டெக்னாலஜியில இருக்கும் IT மக்கள், ப்ராஜக்ட் மாற்ற நினைத்திருந்தால் அதுக்கு இது உகந்த நேரம்.

தற்போதைய நிலை ப்ராஜக்ட் மாத்துறதுக்குக்கு உகந்ததாக இருந்தாலும் H1B ல இருக்கும் மக்கள் இந்தியா செல்வதற்கு இது உகந்த நேரமல்ல.

H1B visa stamping செய்வதில் தற்போது சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எம்பஸிகளிலும் கோவில் பிரசாதம் போல H1B stamping செய்ய செல்லும் அனைவருக்கும் Blue Paper என்றழைக்கப்படும் Form 221G (Request for More documents) வழங்கப் படுகிறது. பல பேருக்கு Visa Rejection கூட நடக்கிறது. ஸ்டாம்பிங் தேவைப்படுவோர் தற்போது இந்தியா செல்வதைத் தவிர்ப்பது நலம். ஸ்டாம்பிங் இருந்தாலும் Port of Entry யிலும் பல கேள்விகள் கேட்டு
Deport செய்வதும் நடந்து வருகிறது. ஏதொரு முக்கிய காரணமும் இல்லாமல் இந்திய விடுமுறை ப்ளான் பண்ணியிருக்கும் நண்பர்கள் பயணத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்க.
மேலதிக விவரம் தேவைன்னா தனி மடல் அனுப்புங்க, கூப்பிடறேன். நிலைமை சகஜமானதும் அப்டேட் பண்றேன்.

தத்துபித்துவங்கள் இருபது

நேத்து பிடிக்காத பத்து அதுக்கு முன்னாடி பிடிச்ச பத்து, இன்னிக்கு தத்து பித்துவங்கள் இருபது. ரெண்டு நாளா கொஞ்சம் சீரியஸா டிஸ்கஷன் போச்சு, அடுத்ததும் அமெரிக்க
காண்ட்ராக்ட் வேலை நிலவரம் பத்தி சீரியஸா வருது. எனவே நடுவுல ஒரு கெக்கே பிக்கே காமடி.பொருத்தருள்க.

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

4. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

5. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

6. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

7. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

8. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

9. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

10. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

11. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

12. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

13. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

14. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

15. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

16. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

17. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

18. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

19. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

20. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

தத்துபித்துவங்கள் கண்டெடுத்தது இணையத்தில், மூழ்கி முத்தெடுத்தவர் : “என்றும் அன்புடன்” பாஸ்டன் ஸ்ரீராம்

Wednesday, December 8, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 7

பத்து பத்து - நேற்றைய இடுகையின் தொடர்ச்சி பிடிக்காத பத்து


1. அம்மாவும் அப்பாவும் அக்காளும் அண்ணனுமே Distant Relatives ஆகிப் போன சோகம். என்னதான் 2 செண்ட்ல இந்தியாவுக்கு பேச முடியுமென்றாலும், வார இறுதியில் வெப்கேம் துணையோடு உரையாடினாலும் அருகாமைன்னு ஒண்ணு இருக்கே அது கிடைக்காது.

2. வாழ்க்கை முறை : அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை எனக்குப் பிடிக்காத ஒன்று. “கட்டற்ற சுதந்திரம்” இங்குள்ளவர்களைக் கெடுத்து வச்சிருக்கு. பதின்ம வயதிலேயே
எல்லாப் பழக்கங்களும் வந்திடுது. அளவுக்கு மீறிய Individuality இங்கு அதிக அளவில் விவாகரத்துகள் நடக்கக் காரணம். விளைவு நெறய் குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரோடும் வாழக் கொடுப்பினை இல்லை. பல பேருக்குத் தனிமையே துணை. வார இறுதியில் பப்புக்கும் பார்ட்டிகளுக்கும் துணை தேடி நெடும் பயணம்.

3. சேமிப்பு இல்லாமை: பணத்தைப் பொருத்த வரையில் நான் ஒரு Conservative. Saving Economy இல் அதிலும் ஒரு சாதாரண Indian Lower Middle Class சூழ்நிலையில்
வளர்ந்த எனக்கு அமெரிக்கச் சூழல் பெரும் வியப்பே. பெரும்பாலான அமெரிக்கர்கள் நாளை என்ற ஒன்றைப் பற்றியே கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்கர்களின் Combined Personal Debt 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகம் (சராசரியாக ஒரு குடும்பத்தின் கடன் 1.2 லட்சம் டாலர்கள்). இங்கிலாந்தின் மொத்த GDP யே அவ்வளவுதான். அறுபதிகளில் அமெரிக்கர்களின் சேமிப்பு சம்பளத்தில் 11 சதவிகிதம், அதுவே தொண்ணூறுகளில் 5 சதவிகிதம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2003ல் அது 2.3 %. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் விழித்துக் கொண்டு 5 முதல் 7 % வரை சேமிப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

இந்த படம் பல நூறு கதைகள் சொல்லும்



4. உப்பு சப்பில்லாத உணவு : இந்தியாவிலிருந்து வந்த புதிதில் எல்லாரும் கடினமாக உண்ரும் விசயம் இது. நல்ல காரசாரமாக சாப்பிட்டுப் பழகிய நமக்கு இங்கு கிடைக்கும் உணவு வாயில் வைக்க வழங்காது. போகப் போக பழகினாலும் நாக்கு இந்திய உணவங்களைத் தேடி அலைவதைத் தவிர்க்க இயலாது.

5. Too many choices : நான் பிடிச்ச பத்தில் சொல்லியிருந்த ஒண்ணு - ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் Customer is King feeling. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு சொல்றா மாதிரி அமெரிக்காவில இருக்கும் அளவுக்கு அதிகமான சாய்ஸ் நம்மளை ஒரு பொருளை வாங்குவதற்கு பல மணி நேரம் செலவிட வைக்கும்.
Big Ticket Purchase எதுவானாலும் முக்கியமாக எலக்ட்ரானிக் பொருட்கள் (உதாரணமாக LCD TV or camera or Laptop) வாங்க முடிவெடுத்தால், மொதோ பிரச்சனை என்ன பிராண்டு / Specification வாங்குவது? ஒரு பொருளுக்கு நூத்துக் கணக்கான சாய்ஸ். கம்பெனியோட சைட்ல விவரங்களைப் பாக்கணும், அப்புறம் Cnet ல Expert review பாக்கணும், Marketplace தளங்களில் Compare பண்ணனும், Yelp, Amazon மாதிரி தளங்களில் User Review படிக்கணும். ஒரு வழியா பல மணி நேரங்கள் செலவழிச்சு ஒரு குறிப்பிட்ட மாடலை செலக்ட் பண்ணி முடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா அடுத்த யுத்தம் ஆரம்பிக்கும். அப்பொருளுக்கு நூறு சைட்ல நூறு விலை போட்டிருப்ப்பான்.
நமக்கோ நாம வாங்கின விலையை விட யாராவது குறைவா வாங்கிட்டாங்கன்னு தெரிஞ்சாத் தலையே வெடிச்சிடும். நாந்தான் கம்மி விலையில வாங்கியிருக்கேன்னு காட்டுவதற்காக
பல மணி நேரம் ஆன்லைன்ல செலவிடுவோம். Amazon பாத்தியா Ebay பாத்தியான்னு வேற எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் வேற பல திசைகள்லேருந்து வரும். இதுக்கெல்லாம் மீறி ஒரு விசயம் இருக்கு. நவம்பர் மாசத்துக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்குன்னு பாக்கணும், ஏன்னா Black Friday க்கு நாம் நெனச்ச பொருள் டீலில் வருமான்னு பாக்கணும். இதுவாவது பரவாயில்ல Big Ticket Purchase ல 100 -200 $ மிச்சமாகும். Macys போன்ற துணிக்கடைகளுக்கு போகும் போது நடக்கும் Coupon கூத்து இருக்கே சொல்லி மாளாது... Vivek & Co வுக்கோ Vasanth & Co வுக்கோ போனோமா நாலு TV பாத்தோமா ஒண்ணை பேரம் பேசி வாங்கி வீட்ல டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு கூல வர்ற சுகம் இருக்கே ... ஹூம்... அது ஒரு கனாக் காலம்..


6. போர் தொடுப்பது / மூக்கை நுழைப்பது : வேறெந்த நாட்டினுடைய ஒரு அடி நிலத்தைக் கூட இதுவரை அபகரிக்காத (காஷ்மீரை குள்ளநரித்தனமாக நம்மோடு சேர்த்திருந்தாலும்)
நாட்டைச் சேர்ந்த எனக்கு அமெரிக்காவின் தேவையற்ற போர்கள் வெறுப்படைய வைக்கின்றன. நாடு பிடிக்கும் எண்ணம், உலக எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் என பல காரணங்கள் இருக்கும் இவர்களுக்கு உலக அமைதிக்கு ஒரு காரணம் கூட தோன்றாதது வியப்பே.

7. Expensive Medicare : இந்த ஊரில் மருத்துவமனைகளும் மெடிக்கல் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சேர்ந்து அடிக்கும் கூட்டுக் கொள்ளை ஒரு Daylight Robbery.
ஊருக்கு ஊர் இலவசமா நூலகம் கட்டி அதில் இலவசமா சினிமா பட டிவிடி கொடுக்கும் அரசாங்கம் இலவச பொது மருத்துவமனை கட்டாது. இவனுங்க வாங்கற வருமான வரிக்கு
இலவசமாகவே மருத்துவ சேவை பண்ணலாம். உலகிலேயே அதிகமா Medicare க்கு செலவு செய்வது அமெரிக்காதான். GDPல 15 சதவிகிதம் இதுக்கு போகுது. ஆஸ்திரேலியா 9%, மிகச் சிற்ந்த சேவை உள்ள ஜப்பான் GDP ல 8% Medicare க்கு செலவு பண்ணுது. DHS மூலம் சிறப்பான சேவை வழங்கும் இங்கிலாந்தின் செலவு 7.5%. தரமான இலவச மருத்துவ வசதி கொண்ட கனடா கூட 10% க்கு மேல செலவு பண்ணுவது கிடையாது. அமெரிக்காவில் இத்தனை பணம் என்னாகுது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுக்கும் மீறி
ஆஸ்திரேலியாவில் annual cost of health care per capita is $2,886. In Canada it is $2,998 in UK it is $2317 the same in USA is
$5711,
இதுக்கும் மேல மருத்துவமனைக்குப் போகும் போதும் பணம் கேட்டால் கோவம் வருமா வராதா?

8. ஆட்டோ : அண்ணன் தம்பியை மிஸ் பண்றேனோ இல்லயோ நான் ஆட்டோவை அமெரிக்காவில் ரொம்பவே மிஸ் பண்றேன். எவ்வளவுதான் ஏமாத்தறாங்கன்னு பொலம்பினாலும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கையைக் காட்டி நிறுத்தி ஆட்டோவில் ஏறிப் போவதில் இருக்கு சவுகரியம் அமெரிக்காவில் கிடையாது. Public Transport வசதி ரொம்ப கம்மி, டாக்ஸி வாடகை அதிகம், அதையும் போன் பண்ணிக் கூப்பிடனும். நெனச்ச நேரத்துக்கு நெனச்ச இடத்தில் கிடைக்கும், தெருக்குத்தெரு ஆட்டோ ஸ்டாண்ட் - இந்த வசதியை மிஸ் பண்ணும் போதுதான் இதன் அருமை தெரியும்.

9. குடியுரிமைச் சட்டம் : Modern America முழுக்க முழுக்க வந்தேரிகளால் நிரம்பியது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் Permanent Residence Process எவ்வளவு இலகுவாக இருக்க வேண்டும்? இந்நாட்டுக்கு வேலை செய்ய வந்து PR விண்ணப்பம் செய்வதில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். அவங்களுக்கு PR கிடைக்க பல வருடங்கள் ஆகுது.
வேலை உரிமை விசா (work visa) வழங்க கெடுபிடி செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு வேலை செய்யத் தெரிவாகி வந்து வேலை செய்பவருக்கு PR கொடுப்பதில் இருக்கும் தாமதம் எரிச்சல் தருது.

10. பிளாஸ்டிக் உபயோகம் : சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஒத்துழைக்கணும், ஓசோன் ஓட்டையை அடைக்க உலக நாடுகள் எல்லாம் சேந்து ரப்பர் உருக்கலாமுன்னு
சொல்லிக்கிட்டே அமெரிக்கா உபயோகிப்பது வருசத்துக்கு 100 பில்லியன் பிளாஸ்டிக் பைகள், இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர்கள். இதுபத்தி இங்கு யாருமே கவலைப் படுவதாகத்
தெரியவில்லை. ஏதோ என்னால முடிஞ்சது ஊரிலிருந்து 4-5 துணிப்பைகள் எடுத்து வந்து யார் என்ன நெனச்சாலும் கவலை இல்லைன்னு துணிப்பைகளில் காய்கறி, பழங்கள்
வாங்கி வருவருகிறேன்.

நேத்தும் இன்னிக்கும் நான் சொன்னது நான் கண்டவரையில் அமெரிக்காவில் எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத பத்து விசயங்கள். உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப்
பின்னூட்டத்தில சொல்லுங்களேன்.

Tuesday, December 7, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 6

பத்து பத்து
முந்தைய பகுதிகள்

இந்தத் தொடரில் இதுவரை H1B விசா மற்றும் இடங்கள் / விலைவாசி பத்தி மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தப் பதிவில் கொஞ்சம் வித்தியாசமா எனக்கு அமெரிக்காவில் பிடிச்ச /
பிடிக்காத பத்து விசயங்களைப் பத்திச் சொல்றேன். நீங்களும் உங்களுக்கு பிடிச்ச / பிடிக்காத விசயங்களைப் பத்தி பின்னூட்டத்தில சொல்லுங்களேன். நான் இங்கு சொல்லியிருப்பது
அனைத்தும் நான் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அனுபவித்து உணர்ந்தவை - இவை என்னோட பர்சனல் ஒப்பீனியன் மட்டுமே.


பிடித்த பத்து

1. Very Systematic : இந்த நாட்டில் இருக்கும் ஒழுங்கு முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகட்டும், பாதசாரிகளுக்கு வழி விடுவதாகட்டும் எங்கு சென்றாலும் வரிசையை கடை பிடிப்பதாகட்டும், அமெரிக்காவில் இருக்கும் ஒழுங்கு அனைவரும் பின்பற்ற வேண்டியது

2. Roads : நாட்டின் உள்கட்டமைப்பின் உயிர்நாடி அமெரிக்காவின் சாலைகள். ரொம்ப க்ளியரா Town Roads / Highways என்று பிரித்து சாலைகளை அமைத்து இருக்காங்க.
ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்ல முதலில் Town Road இல் பயணித்து Highways இல் இணைந்து விட்டால் போக வேண்டிய Town வரை ஹைவேஸில் சிக்னல், பாதசாரிகள், எதிர் வரும் வாகனங்கள்னு எந்த தொந்தரவும் இல்லாம பயணிக்கலாம். சாலைகளின் தரமும் மிகவும் உயர்வு.

3. Ecommerce / Online Shopping : எனக்கு பர்சனலா ரொம்பப் பிடிச்ச இன்னொரு விசயம். ஒரு பொருளை வாங்க பல கடைகள் ஏறி இறங்க வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே பல வெப்சைட்களில் பொருளின் விவரம், விலை, Customer Feedback எல்லாம் படிச்சிட்டு ஆன்லைன்லயே வாங்கலாம். Amazon போன்ற தளங்களில் பயமில்லாமல் கடன் அட்டையை உபயோகித்து பொருட்களை வாங்கலாம். வங்கிக் கணக்கைக் கூட ஆன்லைனில் உபயோகிப்பது எளிது. இந்தியாவில் ICICI மற்றும் HDFC தளங்களை உபயோகித்திருக்கிறேன், இங்கு Bank of America வின் தளம் அவற்றை விட உபயோகிக்க எளிதாக உள்ளது. என்னளவில் Safe கூட.

4. லஞ்சம் இல்லை : அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக லஞ்சம் இல்லை என நான் Blanket Statement கூறவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னைப் போன்ற Common Man
வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனக் கூற முடியும். கடந்த நாலு வருசத்தில் மூணு கார் வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறேன், ஓட்டுனர் உரிமம் வாங்கியிருக்கிறேன்,
Electricity Connection, Phone Connection, Gas Connection வாங்கியிருக்கிறேன். இவ்வளவு ஏன், நாலு முறை Traffic police இடம் பிடிபட்டு ஒரு முறை டிக்கெட் வாங்கி, கோர்ட்டுக்குப் போய் அபராத்தை பாதியாக குறைத்திருக்கிறேன் - எதுக்கும் ஒரு பைசா லஞ்சம் கேட்டதுமில்லை, கொடுத்ததுமில்லை. மில்லியன் டாலர் காண்ட்ராக்ட்
தேவைப்படுவோர் லஞ்சம் கொடுப்பதாக இருக்கல்லாம், ஆனால் மிடில் க்ளாஸ் மக்கள் அமெரிக்காவில் வாழ லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை.

5. Customer is King : அமெரிக்கா வந்து போன எல்லாரும் இதனை ஒத்துக் கொள்வார்கள். இங்குள்ள பெரும்பாலான கடைகளில் கஸ்டமர் சர்வீஸ் மிகச் சிறப்பா இருக்கும். வால்மார்ட் போன்ற பெரிய கடைகளில் பொருட்களின் விவரங்களைப் பற்றி சொல்ல நெறய பேர் இல்லாம இருக்கலாம், ஆனா அக்கடைகளின் வெப்சைட்களில் எல்லா விவரங்களும் கிடைக்கும். ஒரு பொருள் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் அக்கடையின் கிளையில் இருக்கா இல்லயான்னு பாக்கலாம். கடைகளில் ஆங்காங்கே நிறுவப் பட்டிருக்கும் Price Check
உபகரணங்களில் வாங்கும் பொருளின் விலையை அறியலாம். வாங்கிய பொருளை 30 நாட்களுக்குள் (பிடிக்கலைன்னா) திரும்பக் கொடுத்து பணம் பெறலாம். நீங்க மற்றொருவருக்கு வழங்கும் அன்பளிப்புகளுக்கு Gift Receipt கொடுப்பாங்க. அதுல விலை குறிப்பிடப் பட்டிருக்காது. அன்பளிப்பை வாங்கியவருக்கு அப்பொருள் பிடிக்காமல் போனாலோ, அப்பொருள் வேலை செய்யாமல் போனாலோ அல்லது ஒரே மாதிரி 2-3 பொருள் அன்பளிப்பா வந்துவிட்டாலோ (அஜந்தா வால்கிளாக் நியாபகம் வருதா?) அவர் Gift Receipt ஐ எடுத்துச் சென்று வேறு பொருள் வாங்கிக் கொண்டு வரலாம்.

6. Snow : அமெரிக்காவில் இருக்கும் நெறய இந்தியர்களுக்குப் பிடிக்காத விசயம், ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச விசயம். பாஸ்டனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாசம் வரை பனிப் பொழிவு இருக்கும். வாரம் ஒருமுறை இருக்கும் பனிப்பொழிவு ஓரிரு முறை Snow Storm ஆக அடித்துத் தள்ளும். அப்பொழுதெல்லாம் ஊரே வெள்ளையா பாக்க ரொம்ப அழகா இருக்கும். காரின் மீது இருக்க்கும் Snow வை சுத்தப் படுத்தும் பணி தவிர Snow Season ல எனக்கு எல்லாமே பிடிக்கும்.

7. NO Sir Culture : நான் கேள்விப்பட்ட ஒரு விவரம் : வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை அங்கு சுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி பாக்கும் போது கூழைக் கும்பிடெல்லாம் போடாமல் சொல்வது : Good Morning Mr. President - அவ்வளவுதான் அவ்வளவேதான். இந்தியாவில் இருந்து இங்கு வந்த போது எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. என் டீமில் உள்ளவர்களை நான் ஒருபோதும் என்னை Sir என்று அழைக்க விட்டதில்லை எனவே எனக்கு இது பெரிய மாற்றமாக இருக்கவில்லை, நான் யாரையும் Sir போட்டு அழைக்க வேண்டாமென்று ஆகிய போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவரையும் Hi Peter (அ) Hi Ramesh என்று பெயரிட்டுத்தான் அழைக்கணும்,யாரும் இங்கு சார் இல்லை.
இதுல ஒண்ணு கேட்டா இன்னும் ஆச்சர்யப் படுவீர்கள் : என்னை இங்கு இதுவரை Sir போட்டு விளித்தவர்கள் யார் தெரியுமா ? என்னை சாலையில் பிடித்த காவலர்கள் மட்டுமே.

8. 911 போன் : போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி, Domestic violence இன்ன பிற எல்லாத்துக்கும் அமெரிக்காவில் ஒரே நம்பர் 911. ஆபத்துக் காலங்களில் இந்த எண்ணுக்கு போன் பண்ணதும் சில நிமிடங்களில் நமக்குத் தேவையான உதவி வந்து சேரும். மிகச் சிறப்பாக செயல்படும் இச்சேவை ஒரு இலவச ஆபத்பாந்தவன். நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை அலுவலகத்தில் இருக்கும் Fire Alarm அழுத்தி விட்டேன். உடன் வேலை செய்யும் நண்பரிடம் சொல்ல அவர் உடனே 911 க்கு போன் பண்ணினார். நான் தவறாக இழுத்து 2-3 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும் அதுக்குள் 2 தீயணைப்பு வண்டிகள் நிலையத்தை விட்டு கிளம்பி விட்டதாகவும் அடுத்த சில நிமிடங்களில் எங்க அலுவலகத்தில்
இருப்பாங்கன்னும் அடுத்த முனையில் இருந்த பெண்மணி சொன்னார், அவ்வளவு வேகம்.

9. பெண்ணுரிமை : நான் கண்ட வரையில் ஆணுக்குப் பெண் சமம் என்பது அமெரிக்காவில் முழுமையாக நடைமுறையில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு
அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால்
அமெரிக்காவில் எந்தப் பெண்ணும் நானும் ஆணுக்குச் சமம் எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்வது கூட கிடையாது, அவர்கள் தங்களை கொஞ்சம் கூட ஆண்களுக்குக் குறைவாகக்
கருதுவதில்லை.

10. நகரம் / கிராமம் : அமெரிக்காவின் கட்டமைப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய விசயம் - நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் கட்டமைப்பில் அதிக வித்தியாசம் இல்லை.
பாஸ்டன் நகரில் இருக்கும் அதே மாதிரியான நல்ல குடிநீர், உணவு, சாலை வசதிகள், மருத்துவ, பள்ளி வசதிகள், மின்சாரம், இணையம் எல்லா வசதிகளும் நாட்டின் கடை கோடியில் இருக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் இன்று இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கும் வசதிகள் கிராமப் புறங்களில் இல்லை.இது மாறினால் நகரங்களில் பெருகும் ஜனத்தொகை பெருக்கப் பிரச்சனையை பெருமளவு தீர்க்கலாம்.

ஏற்கெனவே இடுகை ரொம்ப பெரிசா போயிடுச்சு, எனவே பிடிக்காத பத்து நாளைக்குச் சொல்றேன்.

Monday, December 6, 2010

அழகா ஆங்கிலம் பேசலாம் வாங்க: பகுதி 7

ரொம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னர் எழுதின இத்தொடரின் சில இடுகைகள்:

தமிழ்மண நட்சத்திர வாரத்தில ஏழு இடுகைகள் எழுதணுமாமே, நேனெங்கே போறது அத்தனை இடுகைகள் வெரைட்டியா எழுத. இதில வேற கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதைகள் எழுத மாட்டேன்னு கமிட் பண்ணிட்டேன், இல்லன்னா மண்டபத்திலயாவது வாங்கி வந்து ஒப்பேத்தலாம். ஒடனே அ ஆ தொடரை தூசி தட்டி எடுத்து அடுத்த பகுதி இதோ:

வழக்கம் போல நாம பேசுற ஆங்கிலத்தில் இருக்கும் தவறுகளை உணர்ந்து அவற்றைத் திருத்திக் கொண்டாலே ஓரளவுக்கு சரியா பேசலாம். இந்த பகுதியில் தொலைபேசியில் பேசும் போது நம்மில் பலர் வழக்கமா செய்யுற தவறுகளையும் திருத்தங்களையும் பாக்கலாம்.


தொலைபேசியில் பேசுறதுன்னு சொன்னதும் நாலு முக்கிய விசயங்கள் ஞாபகத்துக்கு வருது, அவை

1. ஒருவரை கைப்பேசியில் கூப்பிடுவதற்கு முன்னர் Land Line ல கூப்பிடணும், அதில் அவருடன் பேச முடியாத பட்சத்தில் கைப்பேசியில் கூப்பிடலாம்.

2. நீங்க ஒருவரை அவரின் கைப்பேசியில் கூப்பிடும் போது அவர் பிஸியாக இருக்கலாம், முதலில் - இன்னார் பேசறேன், இந்த விசயத்துக்காக கூப்பிட்டேன், ரெண்டு நிமிஷம் பேசலாமா என்று கேட்டு விட்டுத் தொடரவும்.

3. ஒருத்தருக்கு போன் பண்ணிட்டு “யார் பேசறதுன்னு கண்டுபிடி பாக்கலாம்” என்று எரிச்சலைக் கிளப்பாதீர்கள், குரலைக் கேட்டவுடன் கண்டுபிடிக்க நீங்க எம் ஜி யாரோ கருணாநிதியோ அல்ல.

4. வீட்ல போன் எடுக்குறதை விட அலுவலகத்தில் போன் எடுக்கும் போது அதிக கவனமா இருக்கணும். You are the face of your organization for the caller. நீங்க போன் அட்டெண்ட் செய்யுற விதத்தை வைத்துத்தான் நீங்க வேலை செய்யும் நிறுவனத்தையே அடுத்த முனையில் இருப்பவர் எடை போடுவார் எனபதை நினைவில் வைக்கவும். Official Greeting பல விதமா செய்யலாம், பல சரியான வாக்கியங்களில் இதுவும் ஒன்று, இதை சரியான tone இல் சொன்னால் போதும்

Good morning, Thank you for calling Kokran Mekran company, My name is Sriram, How can I help you today?

Telephone Etiquette சம்பந்தமா நாலு விசயங்களைத் தொடர்ந்து தொலைபேசியில் தவிர்க்க வேண்டிய ஆங்கிலத் தவறுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

This is Sriram this side என்று சொல்வதைத் தவிர்க்கலாம் My name is Sriram என்று சொல்வதே அழகா இருக்கும்

What is your good name - தவறு May I have your name? - இதுவே சரி

You will get it today itself / I will do that today itself என்று சொல்வதை விடுத்து You'll get it by the end of the day today என்று சொல்லலாம்

I will just come to your room எல்லாத்துக்கும் ஜஸ்ட் உபயோகப்படுத்துவதை விட்டு I will be with you in minute என்று சொல்வதே சரி.

Hold on மிக அதிக அளவில் தவறாக உபயோகப் படுத்தப்படும் ஒரு பதம் - இதுக்கு அர்த்தம் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்குறதைத் தொடர்ந்து செய்யுங்க என்பதே ஆகும். அடுத்த முனையில் பேசுபவரை இதைச் சொல்வது தவறு, இதுக்கு பதிலா Please be on the line or phone, I will check that for you or I will check if Mr. X is available at office என்று சொல்லலாம்.


I will just be back என்று சொல்வதை விட I will be back in just a minute or few minutes என்று சொல்லுங்க, அழகா இருக்கும்.

Revert back ரிவெர்ட்டுக்கு அடுத்து Back அவசியமில்லை Revert என்பதே போதுமானது.

Mr. X is out of station now, do you want to say something for him? என்று கூறாமல் Mr. X is not in town, he will be back on .., would you like to leave a message for him? என்று சொல்லலாம்

I am not getting you என்பதை விட I'm Sorry, I didn't understand that (or) I'm Sorry, Can you say that again என்பது அழகாக இருக்கும்.


மறுபடியும் அலுவலக போன் சம்பந்தமாக ஒரு டிப். உரையாடல் முடிந்த பின்னர் இப்படிச் சொன்னால் அழகா இருக்கும்.

Is there anything else you need from Kokran Mekran today? Thanks for calling us, have a wonderful day.

அழகா இருக்குன்னு அலங்கார வாக்கியங்களை எல்லா இடங்களிலும் சொன்னா என்ன ஆகும்னு இந்த ஜோக்கைப் படித்து புரிஞ்சிக்கோங்க:

நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண்ணை தெரிவு செய்த மேனேஜர், சம்பளத்தை முடிவு செய்ய எண்ணினார். அந்தப் பெண்ணிடமே எவ்வளவு சம்பளம் எதிர் பாக்கறீங்கன்னு கேட்டார்.
அந்த பெண் மாதத்துக்கு பத்தாயிரம் என்று சொன்னாள். உடனே அழகா பதில் சொல்வதாக எண்ணி மேனேஜர் சொன்னார் - “With Pleasure". அதுக்கு உடனே அந்தப் பெண் அப்படின்னா இருபதாயிரமா கொடுத்திடுங்க என்றாள். புரிஞ்சவங்க சிரிச்சிக்கோங்க..

Sunday, December 5, 2010

எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதையும் தாங்க மாட்டீங்களா என்ன?

அப்படி நம்பித்தான் சங்கர பாண்டி ஐயா நவம்பர் பத்தாம் தேதி மின்மடல் அனுப்பி டிசம்பர் மாதத்தில் ஒரு வாரம் தமிழ் மண நட்சத்திரமாக இருக்க விருப்பமான்னு கேட்டார்.
வேற நல்ல பதிவர் யாரும் கிடைக்காத கொடுமையோ அல்லது இது மாதிரி ஏதாவது பண்ணாலாவது இவன் கொஞ்சம் உருப்படியா எழுதுவான் என்று என்ற அவரின் நினைப்போ
எதுவோ ஒண்ணு அவரை எனக்கு மின் மடல் அனுப்ப வச்சிருக்கு. என்ன பண்றது விதி வலிது இல்லையா? நானும் படிக்கிற பத்துக் கணக்கான (கோடிக்கணக்கான வேணாம்
ஆயிரக் கணக்கான என்று எழுதினாலே அடி பின்னிடுவீங்கன்னு தெரியாதா?) நண்பர்களை நம்பி நானும் ஒத்துக்கிட்டேன்..

ஒரே ஒரு வாரம்தான், ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கிட்டீங்கன்னா, ஏதோ எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களைச் சொல்லிட்டு ஓடிடறேன். கேபிள் சங்கர் மாதிரி எண்டர் கவிதை
எழுதியோ உண்மைத் தமிழன் அண்ணன் மாதிரி நாவல் சைஸில் இடுகைகளோ எழுத மாட்டேன், நீங்களும் துப்புறதை பின்னூட்டங்களில் துப்பிட்டு மறந்திடணும், நேரில் பாக்குற வரைக்கும் மனசில வச்சிக்கிட்டு பழி வாங்குற அளவுக்கெல்லாம் போகக் கூடாது - இந்த டீலிங் ஓகேவா??

டிசம்பர் ஆறிலிருந்து பன்னிரெண்டாம் தேதிவரை இந்த வாய்ப்பு எனக்கு. இது என்ன மாதிரி co incidence என்று தெரியவில்லை, முதலாம் நாள் நான் (நான் மட்டுமா??) மறக்க விரும்பும் நாள். பன்னிரெண்டாம் தேதி மறக்க முடியாத முக்கியமான நாள். ரஜினியின் பிறந்த நாள் என்கிற வகையில் நெறய பேருக்கு டிசம்பர் 12ம் தேதி விசேஷ தினம், ஆனா எனக்கு வேறொரு வகையில் மறக்க முடியாத நாள், அது பத்தி பன்னிரெண்டாம் தேதி சொல்றேன்.

டிசம்பர் 6 - இந்தியாவுக்கே கறுப்பு தினம். உலக அரங்கில் இந்தியா தலை குனிந்த தினம். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்ப்புக்கும் இந்தியாவில் 1992ம் ஆண்டு நடந்ததுக்கும்
என்னைப் பொருத்த வரையில் பெரிய வித்தியாசமில்லை. இக்கறுப்பு தினத்தின் அரசியலுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் இந்தியா சகிப்புத்தன்மை அற்று போனது கண்டும் Co Existence தத்துவத்தில் நம்பிக்கை அற்றுப் போனதும் கண்டு தலை குனிந்த இந்தியர்களில் நானும் ஒருவன். கடவுள் நம்பிக்கை எனக்குண்டு, ஆனால் என்னைப் பொருத்த வரையில் கோவில்களின் தேவையே ஒரு கேள்விக்குறி. கோவில்களின் மீதும் மஸ்ஜித் களின் மீதும் பற்று கொண்டவர்கள் நாடு முழுதும் உள்ள புனரமைக்கப்படாத ஆயிரக்கணக்கான கோவில்களை புனரமைக்க கரம் கோக்காமல் வேண்டாத வேலைக்கு கரம் கோக்க தாழ்ந்தது என் போன்ற நாட்டின் மீது பற்று கொண்டவர்களின் தலை.

இதுக்கு செப்டம்பர் மாதம் வந்த தீர்ப்பு இதை விட பெரிய கொடுமை. இவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் அங்கே என்ன மயித்துக்கு கோவிலும் மஸ்ஜித்தும். அரசே இடத்தை கையகப் படுத்தி தீன் இலாஹி என்று பேரிட்டு ஒரு பள்ளிக்கூடம் கட்டுங்கடா வெண்ணைகளா. அங்கு படிக்கும் பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றையும் நல்ல பண்புகளையும் சொல்லித் தாங்க. நாட்டுக்குத்தேவை பள்ளிகளும், லஞ்சம் வாங்காத அடுத்த சந்ததியும். பிரச்சனைக்கு அலையும் மதவாதிகள் அல்ல.

நான் இப்படித்தான். இந்தியா, லஞ்சம் பத்தி ஏதாவது ஆரம்பிச்சா உணர்ச்சி வசப்படுவேன், ஓவர் செண்டி ஒடம்புக்காகாது, எனவே நம்ப மேட்டருக்கு வருவோம். இந்த வாரத்தில்
வெறும் அமெரிக்கன் விசா பத்தி மட்டும் இல்லாம, Long Long ago விட்டுப்போன அழகா ஆங்கிலம் பேச வாங்க தொடரின் ஒரு பாகமும், நேர்முகத் தேர்வு தொடர்பான தொடரில் ஒரு சில பகுதியும் எழுத உத்தேசம். H1B விசா பத்தின சந்தேகங்கள் இருந்தா கேளுங்க, தெரிஞ்ச வரையில் சொல்றேன்.

ஒரு மிக முக்கியமான விசயம்: நண்பர் நர்சிம்மின் “தீக்கடல்” கவிதைத் தொகுப்பை உயிர்மை வெளியிடுகிறது. “ஏதாச்சும் செய்யணும் பாஸ்” வாக்கியத்தின் சொந்தக்காரர் அடைந்திருக்கும் உயரம் மகத்தானது. முதல் கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துகக்ள் நர்சிம். உங்க கிட்டேயிருந்து இன்னும் நெறய எதிர் பார்க்கிறோம் பாஸ். நான் இனிமே தமிழ் ப்ளாக்கர் என்று என்னை சொல்லிக் கொள்வதை விட்டு விடலாமென்று இருக்கிறேன். பின்ன என்னங்க நாலு புத்தகங்கள் எழுதிய யுவகிருஷ்ணாவையும், கதை மற்றும் கவிதைத் தொகுப்பு எழுதிய நர்சிம்மையும் என்னையும்ஒரே அடைக்குறிக்குள் வச்சா நல்லாவா இருக்கு? கமலஹாசனும் J.K.ரித்திஷும் தமிழ் சினிமா உலகில் கதாநாயகர்கள் என்று சொல்வதைப் போல இருக்கு என் நிலைமை.

அப்புறம், இன்றிலிருந்து அனானி ஆப்சன் எடுத்திடறேன். கொஞ்ச நாளைக்கு முன்னர் ஒரு பிரச்சனை வந்த போது உண்மைத் தமிழன் உள்பட பல பதிவர்கள் அனானி ஆப்சன் எடுக்கச்
சொல்லி அட்வைஸ் பண்ணாங்க, அப்பவே சொல்லியிருந்தேன் - ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டேன், முடிச்சிட்டு எடுக்கறேன்னு. இப்போ ஓரளவுக்கு அனானி பிரச்சனை கொறஞ்சு இருக்கு. அருண் என்று ஒரு நண்பர் அனானி ஆப்சன்ல வந்து பல நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கார், இது மாதிரி இன்னும் பல பேர். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் மட்டற்ற நம்பிக்கை இருக்கும் எனக்கு அனானி ஆப்சன் எடுப்பதில் வருத்தமே, இருப்பினும் தொல்லைகளில் இருத்து தப்பிக்க அது ஒன்றே வழி என்பதினால் இன்றும் முதல் இந்த வலைப்பூவில் அனானி ஆப்சன் இருக்காது. வேறொரு சமயத்தில் இதை மாற்றும் நிலை வரும் என நம்புகிறேன். அருண் போன்ற நண்பர்கள் பின்னூட்டங்களை தனிமடலில் அனுப்பினால் இடுகையில் சேர்த்து விட உத்தேசித்திருக்கிறேன். அப்புறம் அக்டோபர் 15 அன்று எழுதிய ஒரு வேண்டாத இடுகையையும் நீக்கி விட்டேன்.

அடுத்த ஏழு நாளும் என்னுடன் தமிழ் மண முகப்பில் பயணிக்க இருக்கும் அனைவருக்கும் நன்றி.

Tuesday, November 16, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை - பகுதி 5

முந்தைய பகுதிகள்
முஸ்கி (பின்னாடி போட்டா பின் குறிப்பு அல்லது டிஸ்கி, அப்போ முன்னாடி போட்டா முஸ்கி தானே?) : எந்திரன் பாக்காதவனும் என்கவுண்டர் பத்தி கருத்து சொல்லாதவனும்
தமிழனே இல்லைன்னு ஆகிப் போச்சு, அதனால நான் சொல்லிக் கொள்வது என்னன்னா..

நான் எந்திரன் பாத்துட்டேன், அதுக்கப்புறம் வ பார்த்தேன். வ பார்த்தப்புறம் எந்திரன் நல்ல படமா தெரிந்தது எனக்கு (இதை விடச் சின்னதா ரெண்டு பட விமர்சனம் யாராவது எழுதுங்க பாப்போம்)

அப்புறம் என்கவுண்டர் பத்தி என் கருத்து : இந்தியாவில் உள்ள எல்லா போலீஸ் தலைகளும் நீதிபதிகளும் ரூம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வரலாம். எந்தெந்த கேஸ்களை நீதி மன்றத்துக்கு கொண்டு போகலாம், எந்தெந்த கேஸ்களை போலீஸே என்கவுண்டர் மூலம் தீர்க்காலாம் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுட்டா ஒவ்வோரு என்கவுண்டரின் போதும் நானூறு இடுகைகளிலிருந்து தப்பிக்கலாம். அம்புட்டுதேன்..


இப்போ நம்ம பொழப்பைப் பார்க்கலாம். பகுதி ரெண்டில் அமெரிக்காவில் L1 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்வதில் பிர்ச்சனை இருக்குன்னு சொல்லியிருந்தேன். அது என்னன்னு இப்போ பாக்கலாம்.

சென்ற ஆண்டு வரை L1 / H4 விசாக்களில் இருந்தவர்கள், மார்ச் ஏப்ரல் மாதங்களில் கன்சல்டிங் கம்பெனிகளைத் தொடர்பு கொண்டு H1B விசா விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிப்பார்கள். கம்பெனிகளும் பேரம் ஒத்துவந்தவர்களுக்கு விசா அப்ளை செய்வார்கள். வருடா வருடம் அக்டோபர் 1ம் தேதி அமுலுக்கு வரும் அறுபத்து ஐந்தாயிரம் விசாக்களுக்கு விண்ணப்பம் பெறுவது ஏப்ரல் 1ம் தேதி துவங்கும். 2006ம் ஆண்டுவரை இந்த கோட்டா சில பல மாதங்கள் வரை திறந்திருந்தது. 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் ஏப்ரல் ஒண்ணாம் தேதியே கிட்டத்தட்ட மூணு மடங்கு விண்ணப்பங்கள் USCIS அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன - அதிலிருந்து 65000 பேர் லாட்டரி முறையில் தேர்ந்து எடுக்கப் பட்டனர். 2009 ம் ஆண்டு நிலைமை தலைகீழ் - பொருளாதார மந்த நிலைமை காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்தன. H1B மீதிருந்த மோகம் கொஞ்சம் குறைந்தது. கோட்டா டிசம்பர் மாதம் வரை திறந்திருந்தது. அப்போதும் L1 / H4 விசாக்களில் இருந்து கொண்டு H1B க்கு மாற விரும்பியோர் பெரும்பாலானோருக்கு விசா கிடைத்தது. அவங்க எல்லாருக்கும் கன்சல்டிங் கம்பெனிகள் Internal Project இருக்கறா மாதிரி காமிச்சு அப்ரூவல் வாங்கிக்கிட்டு இருந்தாங்க.அப்ளை செய்து ஓரிரு மாதங்களில் விசா அப்ரூவல் கிடைத்தது (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்). அப்ரூவல் கிடைத்த மக்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து புது ப்ராஜக்ட்டுக்கு தேடுவாங்க, ப்ராஜக்ட் கிடைத்ததும் L1 விசாவில் பார்த்த வேலையை விட்டுட்டு H1 க்கு மாறுவாங்க.. இந்த ஆண்டு வரை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது.


இதுக்கு இந்த ஆண்டு USCIS வச்சுது ஒரு ஆப்பு இல்ல இல்ல ரெண்டு ஆப்பு, மொதோ ஆப்பு - Confirmed Client work order (அதாங்க உண்மையான் ப்ராஜக்ட்) மற்றும் Clinet Letter இல்லாம H1B கொடுக்கறதில்ல. அப்புறம் ஆகஸ்ட் 14ம் தேதியிலிருந்து H1B Fee $2320 லேருந்து $4320 ஆக உயர்த்தி ரெண்டாவது ஆப்பு வச்சுது USCIS.ரெண்டாவதாவது வெறும் பணம் சம்பந்தப் பட்ட விசயம். மொதலாவது ஆப்பு கன்சல்டிங் கம்பெனிகளையும் வேலை தேடுவோரையும் செம Catch 22 situation ல வச்சிடுச்சு.போன வருசம் வரைக்கும், மொதல்ல விசா வந்திடும், அப்புறம் ப்ராஜக்ட் கெடைச்சதும், தற்போதைய கம்பெனிக்கு ரெண்டு வாரம் நோட்டீஸ் கொடுத்துட்டு புது கம்பெனி மற்றும் ப்ராஜக்ட்ல சேந்துடுவாங்க, இந்த வருசம் வேலை கெடைச்சாதான் விசா அப்ளை பண்ண முடியுங்கற நெலமை. Premium Processing ல போட்டா கூட விசா கிடைக்க 4-5 வாரம் ஆகும், விசா கெடைச்சப்புறம் தான் பார்க்கும் வேலையை விட முடியும், அதுக்கு ஒரு ரெண்டு வாரம் தேவை. எந்த க்ளையண்டும் ஒரு Contract worker க்காக கிட்டத்தட்ட
ரெண்டு மாசம் காத்திருக்கத் தயாரில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கு விசா கிடைக்குமா என்கிற உத்தரவாமில்லாத நிலையில் யாரரையும் வேலைக்கு எடுப்பதில்லை.
விசாவோடு வா வேலை தர்றேன்னு சொல்ற க்ளையண்ட் ஒரு புறம், வேலை கெடைச்சப்புறம் சொல்லு விசா தர்றேன்னு சொல்ற USCIS ஒரு புறம் - L1 மக்களுக்கு இருபுறமும் அடி.

விப்ரோ, இன்ஃபோஸிஸ், TCS போன்ற கம்பெனிகளில் L1 விசாவில் வேலை செய்யும் கணினித்துறையினருக்கு இக்கம்பெனிகள் பெரும்பாலும் Green Card sponsor செய்வதில்லை. அதுமட்டுமல்லாமல் வாங்குற சொற்ப சம்பளத்துக்கு 12 -14 மணி நேரம் வேலை செய்யணும்.நல்ல கன்சல்டிங் கம்பெனியில சேந்தால் - நல்ல சம்பளம் அத்துடன் சில பல வருசங்களில் பச்சை அட்டையும் வாங்கிடலாம். அதனால நெறய பேர் கன்சல்டிங்குக்கு தாவறாங்க. இந்த வருட மாற்றத்தினால் பாதிக்கப் பட்டவங்க இவங்க. இதுக்கு என்னதான் தீர்வு??

1. தற்போது வேலை செய்யும் கம்பெனியை உங்க விசாவை L1 லேருந்து H1 க்கு மாத்தச் சொல்லி கேட்டுப்பாருங்க - கொஞ்சம் கஷ்டம்தான் - L1 ல இருக்கறவங்க H1 கேட்டா
சந்தேகம் வரும். கம்பெனியில் கொஞ்சம் HOld இருந்தா காய் நகர்த்திப் பாருங்க. H1 கெடைச்சதுக்கப்புறம் ட்ரான்ஸ்பர் செய்வது எளிது.

2. சமீபமா இந்தியாவில் இருக்கும் Embassy களில் L1 Stamping நெறய ரிஜக்ட் ஆவதால உங்க L1 Expire ஆகும்போதோ இல்ல கோட்டா முடியும் முன்னரோ உங்க கம்பெனி அவங்களாகவே உங்களுக்கு H1 அப்ளை பண்ண வாய்ப்பிருக்கு. கொஞ்சம் காத்திருக்கலாம்.

3. மொதோ ரெண்டு விசயங்களில் உங்க கிட்ட கண்ட்ரோல் இல்லை, இது அப்படியில்லை. உங்க Resume வை உங்களுக்கு / நண்பர்களுக்குத் தெரிந்த எல்லா Hiring Managerகளுக்கு அனுப்பி வைங்க. தேர்ந்தெடுக்கப் பட்டால் விசா ப்ராசஸ் பண்ண நல்ல கன்சல்டிங் கம்பெனி தயாராக இருப்பதாகவும் 5-6 வாரங்களுக்குள் கண்டிப்பாக வேலையில் சேர முடியுமெனவும் உறுதி கொடுங்க. தெரிஞ்சவங்க மூலம் வரும் Resume க்கு என்னிக்குமே மதிப்பு அதிகம்.உறுதியா வேலையில் சேருவார்ன்னு தெரிஞ்சா மேனேஜர்கள் வேலை கொடுக்க வாய்ப்புண்டு. Law of Averages இல் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நூறு பேருக்கு ஒரு பொருளையோ சேவையைப்பத்தியோ சொன்னால் கண்டிப்பாக ஒருவருக்காவது தேவை இருக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை...

4. H4 ல இருக்கும் அம்மணிகள் Afford பண்ண் முடிஞ்சா M.S படிக்க ஏதாவது ஒரு யுனிவர்சிடில ஜாயின் பண்ணிடுங்க. There will be some light at the end of the tunnel. ரெண்டு வருசம் கழிச்சு OPT மூலம் 29 மாசம் EAD கிடைக்கும், அதுக்குள்ள H1b பண்ணிடலாம் அல்லது உங்க கணவரின் மூலம் உங்களுக்கும் பச்சை அட்டை கிடைக்கலாம்.

பின் குறிப்பு : இத்தொடர் குறித்தான உங்க மேலான கருத்துக்களை சொல்லுங்க, உங்க கருத்துக்களின் அடிப்படியில்தான் அடுத்த மாசம் இதில் Concentrate பண்ணலாம இல்ல ரொம்ப நாளா நினைப்பில் இருக்கும் இண்டர்வியூ குறித்தான தொடரில் கவனம் செலுத்தலாமான்னு முடிவு பண்ணனும். கேள்விகள் / சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்க,எழுத மேட்டர் இல்லாமல் இருக்கும் எனக்கு லீட் கொடுக்க உங்களை விட்டா யாரு இருக்காங்க?

கொஞ்சம் வேலை இருப்பதால் டிசம்பர் முதல் வாரம் அடுத்த இடுகை வரும். யாருங்க அது ஐயா மூணு வாரம் நிம்மதின்னு குதிக்கறது?? இதுக்கெல்லாம் சேத்து வச்சிக்கறேன் அடுத்த மாசம்..

Wednesday, October 27, 2010

கனவு தேசத்தில் கணினி வாழ்க்கை பகுதி 4

இத்தொடரின் முந்தைய இடுகைகள்

ரெண்டாம் பகுதியில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ போட்ட பின்னூட்டத்திலிருந்து லீட் எடுத்து மூணாம் பகுதியில் அமெரிக்கவின் டாப் டென் ஜாப் மார்க்கெட் ஏரியாக்கள் பத்தி
எழுதினேன், மேலும் அவர் கேட்ட சம்பளம் / செலவு பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்னு சொல்லியிருந்தேன், மூன்றாம் பகுதியிலும் நம்ம ராம்ஜி அதையே திரும்ப கேட்டிருந்தார்.
அவருக்கு இவ்விடுகை சமர்ப்பணம்.

எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள் - பதில் சொல்லியாச்சு

வீட்டு வாடகை என்ன செலவு ஆகும் - இது இடத்துக்கு இடம் மாறுபடும், நியூயார்க், கலிபோர்னியா, நியூ ஜெர்சி, சிகாகோ, பாஸ்டன் ஆகிய இடங்களில் அதிகமாகவும், டெக்சாஸ், நார்த் கரோலினா போன்ற இடங்களில் கம்மியாகவும் இருக்கும், தோராயமாக ஆயிரம் டாலர்கள் வாடகைக்கு எடுத்து வைப்பது நல்லது.

உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக).

அமெரிக்காவில் அரசாங்க பள்ளிகளில் கல்வி இலவசம். பெரும்பாலானோர் பிள்ளைகளை அரசாங்க பள்ளிக்கே அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகளும் இங்குண்டு - For the
affluent class. குழந்தைகள் செலவு விசயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேரெதிர். இந்தியாவில் குழந்தை பள்ளி செல்லும் வரையில் ரொம்ப செலவாகாது, பள்ளி செல்ல
ஆரம்பிச்ச உடனே டொனேஷனில் தொடங்கி எக்கச்சக்க செலவு. பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் மெரிட்ல சீட் பொறியியல் / மருத்துவம் கிடைத்தாலோ அல்லது BA / BSC / BCom சேந்தாலோ ரொம்ப செலவாகாது. அமெரிக்காவில் 5 வயசில தான் பிள்ளைகளை பள்ளியில் சேக்க முடியும், அதுவரை Day Careக்கு ஆகும் செலவு அசாத்தியமானது.
பாஸ்டன் ஏரியாவில Day Care க்கு 2008 ஆனதாக National Assn of Child Care Resource & Referral Agencies சொன்னது $15895 Per kid. கடந்த ரெண்டு வருசத்தில பத்து சதவீதம் கட்டணம் கூடியிருந்தால் கூட வருசத்துக்கு பதினேழாயிரத்துக்கு மேல வரும். ஆனா 5 வயசாச்சுன்னா, KG முதல் 12 ம் வகுப்பு வரை கல்வி இலவசம், பள்ளிப் படிப்பு முடிச்சதும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடும் - கல்லூரிப் படிப்பு அத்தனை Expensive.

எவ்வளவு செலவு ஆகும் : இதுக்கு பதில் சொல்வது ரொம்பக் கடினம். Variable Parameters ரொம்ப ஜாஸ்தி.. இருப்பினும் ஒரு சின்ன குடும்பத்துக்குத் தோராயாமா ஆகும்
செலவைப் பார்க்கலாம்: வாடகை - 1000, மின்சாரம் - 50, Heating : 50, செல்போன் - 50, டீவி - 50 (comcast க்கு அம்பது டாலர் குடுத்து அனைத்து ஆங்கில சேனல்கள் பார்க்கலாம் அல்லது பத்து டாலருக்கு ரொம்ப கம்மி ஆங்கிலமும் மிச்சம் 35-40 டாலருக்கு சன் டீவி பேக்கேஜும் பாக்கலாம்) இந்தியாவுக்கு தொலைபேச - 35$, இண்டர்நெட் - 50$
பால், மளிகை, காய்கறி இன்ன பிற 750-800$, கார் தவணை 250$, கார் இன்சூரன்ஸ்100$, பெட்ரோல் 150$, மருத்துவம் 100$, ஷாப்பிங்க் 200$, வெளியில் சாப்பிடும்
செலவு 250, Local vacation in US : 250$ மற்றும் இந்திய பயணத்துக்கு மாசாமாசம் ஒரு 250$ எடுத்து வைக்கணும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு சில விசயங்கள் அதிகமாகலாம் வேறு விசயங்கள் கம்மியா ஆகலாம். உதாரணமாக கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போனா Eating out / Lunch செலவு அதிகமாகும், ரெண்டு கார் வச்சிருந்தா பெட்ரோல், இன்சூரன்ஸ் அதிகமா ஆகும். ஒரு typical family (2 + 1 kid) க்கு ஆகும் செலவு தோராயமாக 3800 $ முதல் 4000 $ (மாசத்துக்கு) ஒரு ஆயிரம் டாலராவது சேமிக்க முடியலன்னா அமெரிக்கா வருவதில் அர்த்தமே இல்லை, அதையும் சேத்தா மொத்தம் ஐயாயிரம் டாலர்.

To get 5000$ post tax, your salary should be in the order of $7500 to 8000$ per month. The tax structure will vary depending on number of dependents one has. The more the number of dependents the lesser the tax will be..

ராம்ஜி : வருசத்துக்கு 80,000$ - 100,000$ சம்பளம் கிடைச்சா உடனே ஃப்ளைட் ஏறிடுங்க..

ராம்ஜியின் அடுத்த சந்தேகம்: வீடு எங்கே தேடுவது :

இது பத்தி போன பகுதியின் பின்னூட்டதிலேயே சொல்லியிருந்தேன்.
இதுக்கு மொதல்ல இந்திய நகரங்களுக்கும், அமெரிக்க நகரங்களுக்கும் உள்ள வித்தியாசம் பத்தி தெரிஞ்சிக்கணும்.

Locations are City Based in India - Example Chennai City goes upto Tambaram (or even beyond) in the south, beyond Ambattur on
one side and now OMR is considered as Chennai.

Imagine Just Parrys Corner and Mount Road are called Chennai and Saidapet is mentioned as Saidapet, Taminadu instead of Saidapet, Chennai
- This is the basic difference.
உதாரணத்துக்கு பாஸ்டன் நகரை எடுத்துக் கொண்டால் Downtown என்று அழைக்கபடும் இடமும் அதைச் சுற்றியுள்ள வெகு சில இடங்களும் மட்டுமே பாஸ்டன் பின்கோடில் வரும். மற்றவையெல்லாம் Subrubs. இங்கு நம்ம ஊர்ல இருக்குற மாதிரி ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கெல்லாம் வாகன வசதி (Public Transportation) கிடையாது. All roads lead to Romeன்னு சொல்றா மாதிரி நெறய இடங்களிலிருந்து Down Town க்கு மட்டும் ட்ரெயின் இருக்கு. அலுவலகம் Down Town ல இருந்தா வீடு சல்லிசாவும் நல்ல பள்ளிகள் எங்கே இருக்கோ அங்கேயும் வீடு எடுத்துக்கலாம். அலுவலகம் Down Town இல் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தால் அதற்கு அருகாமையில் மேலே சொன்ன Parameters எங்க இருக்கோ அங்க வீடு எடுத்துக்கலாம்.

இந்த சப்ஜெக்ட் பேசும் போது ஒரு சில தகவல்களையும் தெரிஞ்சிக்கலாம். அமெரிக்காவின் குறைந்த விலைவாசி கொண்ட பத்து மாநிலங்கள் 1.Oklahoma 2.Texas
3. Tennessee 4. Arkansas 5.Nebraska 6.South Dakota 7.Missouri 8.Kansas 9.Georgia 10. Mississippi
இதுல டெக்சாஸிலும் ஜியார்ஜியாவிலும் வேலைவாய்ப்புகளும் நல்லா இருக்கும்.

பாஸ்டனுக்கும் சார்லெட்டுக்கும் விலைவாசியில் கிட்டத்தட்ட 30% வித்தியாசம் இருக்கு. இங்க போயி பாருங்க
http://www.bankrate.com/calculators/savings/moving-cost-of-living-calculator.aspx ரொம்ப இண்டரஸ்டிங்கா இருக்கு, இரண்டு ஊர்களுக்கு இடையில்
இருக்கும் விலைவாசி வித்தியாசத்தை அழகா பட்டியலிட்டு இருக்காங்க..

ரெண்டாம் பகுதியில அம்போன்னு விட்ட (அம்பி சார் ரொம்ப அக்கறையா விசாரிச்ச) விசா ட்ரான்ஸ்ஃபர் பிரச்சனை பத்தியும் இடமிருந்தா அப்பாவி தங்கமணி கேட்ட கனடா மேட்டரையும் அடுத்த பகுதியில் பாக்கலாம்.

Tuesday, October 19, 2010

கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை பகுதி 3

பகுதி இரண்டில் நம்ம பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ சில விவரங்கள் கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார்.

அப்பின்னூட்டம் : எந்த நகரங்கள் பணி புரிய +வாழ சிறந்த இடங்கள்.வீட்டு வாடகை என்ன செலவு ஆகும்? உணவு, குழந்தைகள் கல்வி கட்டணம் எவ்வளவு செலவு ஆகும் ( தோராயமாக). குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு இருந்தால் அமெரிக்கா பணிக்கு வர வேண்டும்.

இந்த இடுகையில் இவை பத்தி எழுத ஆரம்பிக்கிறேன்.

விவரங்களுக்குள்ள போகும் முன்னே ஒரு டிஸ்கி : இங்கு சொல்லப் படுபவை என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே, மேலும் The suggested locations are only from the stand point of getting contract jobs while one works in Consulting under H1B Visa. Until Green Card, H1B will play a major role in every decision and having a project is imperative to keep the H1B alive.

1. வாழ / பணி புரிய சிறந்த இடங்கள் : அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்கேயே வாழ் நாள் முழுதும் இருக்கின்றனர். இங்கு குடியேறியிருக்கும் மற்றவர்கள்தான் (குறிப்பாக இந்தியர்கள்) இடமாற்றத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுக்கு எனக்குத் தெரிந்து இரண்டு காரணங்கள் - 1. மேலே சொன்னது போல விசாவில் இருக்கும் வரை வேலையில் இருப்பதுதான் முக்கியம், எங்கு வேலை கெடைக்குதோ அங்க பொட்டி கட்டவேண்டியதுதான் 2. அமெரிக்காவில் எங்கிருந்தாலும் அது நமக்கு வெளி நாடுதான் - இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரம் தான். (ஒரே நேரம்தான்னு சொல்ல முடியல ஏன்னா அமெரிக்காவில் 4 Time Zone இருக்கு)

பொதுவா அமெரிக்காவில் வாழ சிறந்த இடங்கள் லிஸ்ட் வேணும்னா இணையத்தில நெறய இருக்கு, http://money.cnn.com/magazines/moneymag/bplive/2010/top100/
இந்த லிங்க்ல பாத்தீங்கன்னா பத்தென்ன நூறு இடங்களின் பட்டியலே இருக்கு.

இப்போ கன்சல்டிங்ல இருக்கும் தேசி மக்களுக்கு உகந்ததாக நான் கருதும் (நல்ல பாத்துக்கோங்க மக்கா முக்கியமா ஹாலி பாலா, இதுல ஃப்ளோரிடா இல்லாதது என்னோட கருத்து மட்டுமே) டாப் டென் இடங்களைப் பார்க்கலாம். அப்புறம் Cost of Living ல வாடகையை மட்டும்தான் குறிப்பிட்டுச் சொல்வேன். மாநில வரி தவிர மத்த விலைகள் ஓரளவுக்கு எல்லா இடத்திலும் ஒரே மாதிர்தான் இருக்கும். (எங்க போனாலும் அதே வால்மார்ட், அதே மேசீஸ், அதே டார்கெட் இன்ன பிற இன்ன பிற)

1. நியூ யார்க் நகரம் / நியூ ஜெர்சி : என்னை பொருத்த வரைக்கும் இந்த மெட்ரோ ஏரியாத்தான் வேலைகளின் தலை நகரம் என்பேன். NY / New York என்பது நியூ யார்க் மாநிலத்தைக் குறிக்கும், NYC / New York City என்பது உலகப் புகழ் நியூயார்க் நகரத்தைக் குறிக்கும் (ஆமா பச்சையம்மா கையில் தீப்பந்தம் பிடிச்சிக்கிட்டு நிக்குமே அதேதான்). ஹட்சன் நதி நியூயார்க் நகருக்கும் நியூ ஜெர்சி மாநிலத்தின் ஜெர்சி சிடிக்கும் இடையில் இருக்கு, NYC யும் NJ உம் சேர்ந்த ஒரு மெட்ரோ ஏரியா மிகப்பெரிய Job Market Area. இந்தப் பகுதியில இருக்குறவங்களுக்கு அடுத்தடுத்து ப்ராஜக்ட் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

சாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள் இருக்குமிடம், இந்தியப் பொருட்களின் availability, அமெரிக்காவின் சிறந்த Public Transport System, வேலை வாய்ப்பு

பாதகங்கள் : மிக அதிக அளவில் இந்தியர்கள், குளிர், பனிப் பொழிவு, வாடகை அதிகம்.

2. கலிபோனிர்யாவில் - சான்ஃப்ரான்ஸிஸ்கோ / சன்னிவேல் / சனோசே (San Jose) பகுதி : இதுவும் மிக அதிக வேலை வாய்ப்பு உள்ள பகுதி மற்றும் இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதி + : வேலை வாய்ப்பு, மிதமான் சீதோஷண நிலை (வருடம் முழுதும் கிரிக்கெட் விளையாடலாம்), இந்தியர்கள் / இந்தியப் பொருட்கள் மற்றும் சன்னிவேலில் உள்ள இந்திய உணவகங்கள் (பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெரியும்)
- : மிக அதிக வாடகை

3. டெக்சாஸ் மாநிலம் - முக்கியமாக டல்லாஸ் (Dallas) ஏரியா : வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள ஏரியா. இங்கும் இந்தியர்கள், இந்தியக் கடைகள், உணவகங்கள் அதிகம்.
குளிர் தாங்காதுன்னு சொல்றவஙக்ளுக்கு நல்ல இடம், ஆனா வெயில் அதிகம். State Tax கிடையாது (உதாரணமா பாஸ்டன்ல் இருந்தா வருமான வரியில் 5 % State Tax)
மற்றும் மிகக் குறைந்த வாடகை (பாஸ்டன்ல 2BHK 1500 $ டல்லாஸ்ல 500 - 800 $) ஆகியவை சாதகங்கள். வெயில் ஒரு நெகடிவ் பாயிண்ட்.

4. சிகாகோ : Windy City என்றழைக்கப்படும் சிகாகோ என் பார்வையில் அடுத்த சிறந்த இடம். அழகான ஊர், மிக அதிக வேலை வாய்ப்புகள். குளிர், பனிப்பொழிவு, குளிர் காற்று என இயற்கைத் தொந்தரவு அதிகம், மிதமான வாடகை விகிதங்கள். ரெண்டு அழகான கோவில்கள் இங்க இருக்கு.

5. சார்ல்லெட் (Charlotte, North Carolina): சமீப காலங்களில் நெறய கம்பெனிகள் காலூன்றிய இடம் (Bank of America, Fidelity, Red Hat, Wachovia are a few to name). நெறய வேலை வாய்ப்புகள், அப்படியே வேலை கெடைக்கலனாலும் சீமாச்சு அண்ணனிடமோ, பழமை பேசியாரிடமோ சொன்னா ஒடனே வேலை போட்டுக் கொடுத்திடுவாங்க, ரெண்டு பேரும் மொதலாளிகளாக இங்க இருக்காங்க. அருமையான் வெதர், அதிகம் செலவு வைக்காத ஊர். One of my favorites.

6. பாஸ்டன் : ஐயா எங்க ஊர், எங்க ஊர். பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர், வெட்டிப்பயல் பாலாஜி இருந்த ஊர் அப்படின்னு ஏகப்பட்ட பெருமை
இந்த ஊருக்கு. இதுபோக Educational Capital of US ன்னு சின்னதாவும் ஒரு பெருமை இருக்கு. Financial Companies, Edu Institutions,
Insurance Companies, Pharma / Bio companies
ன்னு நெறய இருக்கு - வேலை வாய்ப்பு அதிகம். ஓரளவுக்கு நல்ல Public Transportation உள்ள ஊர். குளிர், பனிபொழிவு, அதிக வாடகை, மோசமான் ட்ராஃபிக் போன்றவை நெகடிவ் பாயிண்ட்ஸ்.

7. மின்னியாபொலிஸ் (minneapolis) : அமெர்க்காவின் Ice Box என்று சொல்லலாம், அவ்வளவு குளிர். இருப்பினும், நெறய கம்பெனிகள் இருப்பதால் (Target, United Health, Wells Fargo, Xcel Energy, Pepsi, 3M Etc) இங்கு நிறைய வேலை வாய்ப்புகள்.

8. Washington DC, Baltimore MD, some part of Virginia அடங்கிய DC Metro area : தலைநகரமும் அதன் அருகாமையில் இருக்கும் இடங்களும். புதுதில்லி, குர்கான், நொய்டா அடங்கிய மெட்ரோ ஏரியா மாதிரி. Government client concentrated area.

9. அட்லாண்டா

10. கொலம்பஸ், ஒஹாயோ (Columbus, OH)

இது என் பார்வையில் டாப் டென் இடங்கள், உங்க மதிப்பீடு வேற மாதிரி இருக்கலாம். எல்லா மாநிலங்களிலிருந்தும் எனக்கு வரும் வேலை வாய்ப்பு விவரங்களை வைத்து இதைத்
தொகுத்திருக்கிறேன்.

ராம்ஜி யாஹூ கேட்ட மத்த விவரங்கள் அடுத்த பகுதியில்..

Adios Amigos...

Sunday, October 17, 2010

கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை - பகுதி 2

என்னடா இது மொதோ பகுதி எழுதாம ரெண்டாவது பகுதின்னு போட்டிருக்கேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி லாங் லாங் அகோ என்றழைக்கப்படும் ஏப்ரல் மாசத்தில் எழுதின டாலர் தேசம் தான் இது, ஆதி தாமிரா போன்ற பெரியோர்களின் சொல்படி பேர் மாற்றம் செஞ்சிருக்கேன், நல்லா இருக்கா?

பணிச்சுமை, வாழ்வில் சில மாற்றங்கள்னு பல காரணங்க இருந்தாலும், எதுவுமே எழுதத் தெரியல என்பதுதான் உண்மையான காரணம், முதல் பாகத்திலேயே சொல்லியிருந்தேன் -
ஏதாவது கேள்வி கேட்டீங்கன்னா, அதிலேருந்து லீட் எடுத்து எழுதறேன்னு.யாரும் இல்லாத டீக்கடையில் டீ ஆத்தினாலும் பரவாயில்லயின்னு இதோ ரெண்டாம் பகுதி.


ஒண்ணு ரெண்டு நல்ல விசயங்கள பாத்துட்டு பின்னர் பிரச்சனைக்குரிய விசயங்களைப் பார்ப்போம்

1. Current Job Market in US for IT Contracting : அமெரிக்கா நடப்பு ஆண்டின் ரெண்டாம் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மெள்ள மீண்டு வருகிறது. ஒரிரு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த வேலைகளை (Projects) நிறுவனங்கள் செய்ய ஆரம்பித்து விட்டன.பல நிறுவனங்கள் Wait and Watch Mode இல் இதுவரை இருந்தன, நிலைமை சீராகும் அறிகுறிகள் தெரிந்தவுடன், புது ப்ராஜக்ட்களில் செலவு செய்ய ஆரம்பித்து விட்டன. மேலும், It is common for companies to hire temporary workers (project based contractors) instead of full time employees immediately after a recession. ஆக மொத்தம் Contracting இல் இருப்பவர்கள் பலருக்கு இப்போ வேலை கிடைச்சிக்கிட்டு இருக்கு.

இப்போதைக்கு எனக்குத் தெரிந்து எல்லா டெக்னாலஜியிலும் காண்ட்ராக்ட் வாய்ப்புகள் இருக்கு, குறிப்பா டெவலெப்மெண்ட் (Oracle / Java / Donet/ SQL)ஆட்களுக்கு அதிகமா வாய்ப்பு இருக்கு. அதுக்குக் காரணம், புது அப்ளிகேஷன் டெவலெப்மெண்ட் நெறய கம்பெனிகள் செய்றாங்க மற்றும் 1999 /2000 ஆண்டு வாக்கில் நெறய அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டன, அவையனைத்தும் தங்களின் Life Cycle முடிப்பதனால், Upgrade / redo செய்ய நெறய வாய்ப்புகள் இப்போ இருக்கு.

டேட்டாபேஸ் அட்மின்களுக்கும் ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கு, இப்பொ நெறய ப்ராஜக்ட்ஸ் டெவலெப்மெணெட் ஸ்டேஜ்ல இருப்பதால், இன்னும் ஓரிரு மாதங்களில் QA மக்களுக்கும்
வாய்ப்புகள் நெறய உருவாகும்.

Bottomline இதுதான் - நீங்க இப்போ இருக்கும் ப்ராஜக்டிலிருந்து தாவ நினைத்திருந்தால் - இது நல்ல தருணம். நவம்பர் மாதத்தில் வேறு ப்ராஜக்ட் கிடைச்சா நலம், இல்லன்னா பெரும்பாலும் ஜனவரி 15க்கு அப்புறமே கிடைக்கும். Thanksgiving, Travel season, Christmas, Newyear ன்னு வரிசையா வரும், எவனும் வேலைக்கு வரமாட்டான்.

2. நியூஃபெல்ட் மெமோ :

இந்த வருஷம் ஜனவரி மாசம் USCIS வெளியிட்ட இந்த சுற்றறிக்கை அமெரிக்க வாழ் H1B மக்களை ஒரு கலக்கு கலக்கியது, அந்நேரத்த்தில் இரண்டு இந்தியர்கள் பேசும்போதெல்லாம்
இத்தலைப்பு கண்டிப்பாக இடம்பெற்றது. இது முக்கியமாக வழக்கிலிருகும் Employer - Employee உறவை கேள்விக்குறியாக்கியது.

தேசி கன்சல்டிங் என்று அன்புடன் அழைக்கப்படும் கம்பெனின்கள் இயங்கும் முறையை பாப்போம் : ABC கம்பெனி குமார் என்பவரை வேலைக்கமர்த்தி அவருக்கு H1B Visa Sponsor
செய்யும், விசா கிடைத்ததும் அவரை அமெரிக்கா அழைத்து வந்து அவருக்கு ப்ராஜெக்ட் தேடும். இது H1B visa வின் அடிநாதமான "JOB FIRST VISA NEXT" கொள்கைக்கு எதிரானது. மேலும் குமாரை ஏதோ ஒரு க்ளையண்டுக்கு பத்தி விட்டதும், குமாருக்கும் ABC கம்பெனிக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்தே போகும். சம்பளம் மட்டும் மாதம் ஒருமுறையோ இரு முறையோ அவர் வங்கி கணக்குக்கு போகும், மத்தபடி அந்த க்ளையண்ட் ப்ராஜக்ட் முடிந்தால் தான் ABCகம்பெனி குமாரைப் பத்தியே நினைக்கும். குமார் தினமும் ரிப்போர்ட் செய்வது க்ளையண்ட் மேனேஜருக்குத்தானே தவிர Employer க்கு அல்ல.

இதைத்தான் இந்த சுற்றறிக்கை கடுமையாக சாடியது. Employer - Employee Relationship எப்படி இருக்கணும்னு தெளிவா சொல்லியது. இதில் உள்ள மிக முக்கியப் பகுதியை இப்போ பாக்கலாம்.

United States Employer means a person, firm , corporation, contractor or other association or organization in the United
States which
1. Engages a person to work within the United States
2. Has an Employer - Employee relationship with respect to employees under this part, as indicated by the fact that it may
hire, pay, fire, supervise or control the work of any such employee and
3. Has an Internal Revenue Service Tax Identification number.

முதலாவது மற்றும் மூணாவது பாயிண்ட்டில் யாருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. இரண்டாவதில் தான் பிரச்சனையே. பெத்த கொழந்தய தவிட்டுக்குக் கொடுப்பது போல
H1B எம்ப்ளாயியை க்ளையண்டுக்குத் தத்து கொடுத்தப்புறம் ABC கம்பெனி குமாரின் day to day வேலைகளில் தலையிடாது - இதைத்தான் கேள்விக்குறியாக்கியது இந்த சுற்றறிக்கை.

இது இப்படி இருக்க, இங்குள்ள பலரும், இதுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கத் தொடங்கினர். Direct Client மட்டும்தான் லீகல், ABC கம்பெனிக்கும் க்ளையண்டுக்கும் இடையில் ஏதேனும் ஒரு கம்பெனி இருந்தால் அது இல்லீகல் என்றெல்லாம் அர்த்தங்கள் கற்பிக்கப் பட்டன. நியூஃபெல்ட் இது பத்தியெல்லாம் சொல்லவே இல்லை.

இதன் அடிப்படியில் H1B visa வழங்குதல் சிக்கலாகியது, Port of Entry யிலும் (முக்கியமாக நியூயார்க் / நியூஜெர்ஸி) பலர் திருப்பி அனுப்பப் பட்டனர். USCIS இன் மீது கம்பெனிகள் ஒரு வழக்குப் போட்டன, வழக்குறைஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் USCIS Director ஐ சந்தித்து மனு கொடுத்தனர். Industry யும் தன் பங்குக்கு Indian H1B Contract work force இன் முக்கியத்துவத்தை திரை மறைவில் அரசுக்கும் USCIS க்கும் உணர்த்தியது.

3-4 மாதங்கள் நீடித்த குழப்பம் மே, ஜூன் மாத வாக்கில் தெளிவாகியது, இப்போது நிலைமை சீராக உள்ளது. என்ன ஒரு விசயம், H1B Petition (Extension or Transfer) அனுப்பும்போது, க்ளையண்ட்டிமிருந்து ஒரு வாக்குமூலம் வாங்கி இணைக்க வேண்டும்

“குமார் என்பவர் எங்களின் (க்ளையண்ட்) ஊழியர் அல்ல, அவர் ABC கம்பெனியின் முழுநேர ஊழியர், அவரை ஒரு குறிப்பிட்ட வேலையை (complete job description) செய்து முடிக்க நாங்கள் ABC கம்பெனியை பணித்துள்ளோம்.
குமாரை Supervise / Control செய்யும் அதிகாரம் ABC கம்பெனியின் முதலாளி திரு. ரெட்டிகாரு அவர்களுக்கே உரியது. எங்களுக்கு (க்ளையன்ட்) குமாரை வேறு ஒரு க்ளையண்டுக்குப் பத்தி விடும் அதிகாரம் எங்களுக்குக் கிடையது, அந்த அதிகாரமும் திரு.ரெட்டிக்கே உரியது. மேலும் இந்த ப்ராஜெக்ட் ஒரு On Going Project, எங்களுக்கு குமாரின் சேவை வெகுநாட்களுக்குத் தேவைப்படும்”

இப்படி ஒரு வாக்குமூலம் (Decent ஆ சொன்னா Client Letter) வாங்கிக் கொடுத்தா H1B Extension / Transfer இல் பிரச்சனை ஏதும் பெரும்பாலும் இருக்காது.
இந்த முறையில் நெறய ட்ரான்ஸ்ஃபர் இந்த ஆண்டு நடந்துள்ளது, ஒரு பிரபல பதிவர் கூட அண்மையில் தன்னுடைய விசாவை வேறொரு கம்பெனிக்கு மாற்றியதாகக் கேள்வி.

பழமைபேசி : முதற்கண் தாமதத்துக்கு மன்னிக்கனும், முடிஞ்ச வரை தெளிவாச் சொல்லியிருக்கேன்னு நெனைக்கிறேன்,ஏதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க, பொதுவில் சொல்லும் விசயமா இருந்தா பதிவில் சொல்றேன், இல்லேன்னா, தனிமடலில் சொல்றேன்


3. இந்த வருஷ H1B Quota :

2007மற்றும் 2008ம் வருஷங்களில் ரெண்டு மடங்கு அப்ளிகேஷன்கள் வந்ததால் லாட்டரி சிஸ்டம் மூலம் 65000 விசாக்கள் வழங்கப் பட்டன், போன வருஷம் நிலைமை தலைகீழ்.
டிசம்பர் மாதம் வரை விசா இருந்ததது. போன வருஷம் மாதிரியேதான் இந்த வருஷமும். அக்டோபர் 8ம் தேதி வரை 41900 பெட்டிஷன்கள் அனுப்பப்பட்டு உள்ளன, மீதம் இருப்பது
23,100 விசாக்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை ரொம்ப மந்தமா போய்கிட்டு இருந்தது. L1 to H1, L2 to H1, H4 to H1, OPT to H1 மக்கள் பலரும் அக்டோபர் அருகில் வரும் சமயத்தில் விசா அப்ளை செய்துள்ளனர், Blanket L1 விசாவுக்கு பங்கம் வந்திருப்பதால் (மேலதிகத் தகவல்கள் அடுத்த பாகத்தில்) இந்திய நிறுவனங்களும் H1B அப்ளை செய்துள்ளன. இக்காரணங்களால் ஒரு திடீர் Surge in numbers. ஜனவரி மாதம் வரை கோட்டா இருக்கும் என்பது என்னுடைய அனுமானம்.

Quota Open ஆக இருந்தும் இந்தியாவிலிருந்து முன்னர் போல கன்சல்டிங் கம்பெனிகள் மூலம் வரமுடியவில்லை, அமெரிக்காவில் L1 / L2 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்யமுடியவில்லை, இதற்கெல்லாம் என்ன காரணம்?? இந்த பாகத்தில் ஒரு சில பாஸிடிவ் ஆன விசயங்களைப் பாத்தோம்,
நெகடிவ் விசயங்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

Sunday, August 22, 2010

கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும்..

எ(நம)து அருமை நண்பர் வால்பையன் ஈரோடு அருணின் மனைவி இன்று அதிகாலை 1.10 மணிக்கு அவர்களின் இரண்டாவது பெண் குழந்தையை
பெற்றெடுத்துள்ளார். ஆண்டவன் அருளால் தாயும் சேயும் நலம்.

அருணுக்கும் அவர் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள். மூத்த வாலுக்கு இனி பொறுப்பு வருமென்று நம்புவோம்.

வாழ்த்துக்களை அனுப்ப மின்மடல் : arunero@gmail.com

Thursday, July 8, 2010

நண்பர்களுக்கு நன்றி

நேற்று என்னுடைய பிறந்த நாள் (ஜூலை ஏழு). முதல் முறையாக என் பிறந்த நாள் பொதுத் தளங்களில் அறிவிக்கப் பட்டது (கண்ணு பட்டு விடுமுன்னு அம்மா என் போட்டோவை
சன் டிவிக்கெல்லாம் அனுப்புனதில்லை - அப்படியே அனுப்பிட்டாலும்...).

என்னுடைய இருபத்து எட்டு வருட வாழ்க்கையில் இத்தனை ஆயிரம் பேர் எப்போதும் வாழ்த்தியதில்லை (சரி சரி இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க - வயசில ஒண்ணு ரெண்டு
அதிகமாகவும், வாழ்த்தியவர்கள் எண்ணிக்கையில் ஒண்ணு ரெண்டு கம்மியாகவும் இருந்திருக்கலாம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பான்னு அடியேனை மன்னியுங்கள்).

தங்கள் பதிவுகளில் வாழ்த்து சொன்ன தோழர் ஈரோடு அருணுக்கும் (valpaiyan.blogspot.com), நண்பர் / Neighbour / Colleague/ என்னோட தற்போதைய கம்ப்யூட்டர்
கன்சல்டண்ட் அனைத்துமாகிய இளாவுக்கும் பெரிய கும்பிடு போட்டுக்கறேன். அவ்விரு தளங்களின் பின்னூட்டங்களில் வாழ்த்திய பழமை பேசி, சுகுமார், மேனகா, ஜே, செந்தில், தேவா,
ராம்ஜி, நசரேயன்,பா.ரா, கலா நேசன், கீதா ஆச்சல், நேசமித்ரன், கிரி, பட்டாபட்டி, இனியவன் உலக்ஸ், Nari, Writer விசா, கும்க்கி, வெறும் பய, காவேரி கணேஷ்,
தருமி ஐயா, ஈரோடு கதிர், மங்குனி அமைச்சர், விதூஷ், விக்னேஷ்வரி, வத்திராயிருப்பு பாலகுமாரன், ஜோதிஜி, சசி குமார், மைதிலி, உண்மைத் தமிழன், கபீஷ், ஆரூரன்
விசுவநாதன் ஆகியோருக்கும் நன்றி.

தனி மடலில் வாழ்த்திய பொற்கொடி, அப்பாவி தங்கமணி, அநன்யா, உமா ருத்ரன், தருமி ஐயா, நர்சிம், அனாமிகா துவாரகன் ஆகியோருக்கும் நன்றி. தொலைபேசிய
சீமாச்சு அவர்களுக்கும் நன்றி. மேலும் மனதிலேயே வாழ்த்திய உள்ளங்களுக்கும், இனிமேல் Belated wishes சொல்லப் போகும் நண்பர்களுக்கும் நன்றி.

ப்ளாக் எழுதி என்னத்த கிழிச்சேன்னு கேக்கும் தங்கமணிக்கு நேத்து இரண்டு இடுகைகளையும் பின்னூட்டங்களையும் காட்டினேன், இந்த லிஸ்டில் இளா, நர்சிம்,சீமாச்சு தவிர வேறு
யாரையும் நான் பார்த்தது கூட கிடையாதுன்னு சொல்லும் போது பெருமை தாங்கல எனக்கு - நன்றி நண்பர்களே..


என்னோட அமெரிக்க விசா பத்தின தொடரில் இப்படி எழுதியிருந்தேன் - // இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10
ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும்// அதுக்கு நாஞ்சில் மைந்தன்னு ஒரு நண்பரின் பின்னூட்டம் - //இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும் நான்
கேள்விப்பட்ட வரையில் பலர் கூறும் காரணம்... Comfortable lifestyle// - எதுவுமே எழுதாம ப்ளாக்கர்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருந்த எனக்கு லீட் கொடுத்த
நாஞ்சில் மைந்தனுக்கு நன்றி - அமெரிக்க வாழ்க்கையில் என்னா Comfortableன்னு எழுதறேன் நண்பரே..

Saturday, May 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று (மே மாதம் 23ம் திகதி) பிறந்த நாள் காணும் “பொற்கேடி” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபடும் - கழகக் கண்மணி, ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,
சியாட்டில் சிங்காரி பொற்கொடியை வாழ்த்த வயதில்லாததனால் வணங்குகிறேன். அவர் எல்லா வளமும் ,நீண்ட ஆயுளும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இன்னிக்கு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தியான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டா என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, May 4, 2010

பத்துப் பாட்டு

இந்த அநன்யா Aunty என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு தொடர் பதிவு எழுதக் கூப்பிட்டு இருக்காங்க, எனக்குப் பிடிச்ச அஞ்சு பாடகர் / பாடகிகளை வரிசைப் படுத்தி எழுதணுமாம்.
என்னோட ஆங்கில அறிவும் சங்கீத ஞானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் - கேள்வி ஞானம் மட்டுமே / இலக்கண அறிவு பூஜ்யம். என்னால் ஒரு பாட்டை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே அணுக இயலும். ஸ்ருதி சேரல ஐஸ்வர்யா கூட வரலன்னெல்லாம் (முன்னது கமல் பொண்ணு ரெண்டாவது ரஜினி பொண்ணு) பேச முடியாது. எனவே கேக்குறதுக்கு ரம்யமா இருக்குற எல்லாப் பாட்டும் நல்ல பாட்டு, மத்ததெல்லாம் குத்துப் பாட்டு - இதுதான் என்னோட அளவுகோல்(ரம்யா யாருன்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் நிராகரிகப்படும் என்பதை கறாராகத் தெரிவித்துக் கொள்கிறேன்)

S.P.B யும் யேசுதாஸும் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். தீபன் சக்கரவர்த்தி,ஹரிஷ் ராகவேந்தர், உன்னி கிருஷ்ணன் போன்ற பலர் ரெண்டாவது லிஸ்ட்ல வருவாங்க.
பாடகிகளில் S.ஜானகி யும் சித்ராவும் ஃபேவரைட்ஸ். நான் A.R.R ஐ வெறுக்காத இளைய ராஜா வெறியன். கண்ணதாசன் ஒரு கவியரசர், வாலியும் வைரமுத்துவும் கவி குறு நில
மன்னர்கள், மத்தவங்க எல்லாம் கவிச்சிப்பாய்கள்- இவை என்னோட மதிப்பீடு.

பாடகர்களை லிஸ்ட் போடறதை விட எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்களை லிஸ்ட் போடலாமுன்னு நெனக்க்கிறேன். இந்த லிஸ்ட் ரொம்ப பெரிசு, அதில அஞ்சு மட்டும் எடுக்கவே முடியாது எனவே பத்து பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன்.

1. “யார் யார் சிவம் - நீதான் சிவம்” வித்யாசாகர் இசையில் தலைவர் பாடியது. இந்த பாட்டை ஒரு முறை கேட்ட யாரும் பிடிக்கலேன்னு சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது, மறுபடியும் கேட்டுத்தான் பாருங்களேன்..


2. “செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” எனது கார் பயணங்களில் என் மீது அடிக்கடி வந்து மோதும் பாடல்- எத்தனை முறைக் கேட்டாலும் அலுக்காத பாடல்களில் ஒன்று.
மொட்டையின் இசையில் ஜேசு அண்ணாவின் குரலில் வந்த தேவ கானமிது.



3. “பூவே செம்பூவே” - சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் Bouncing Music பாட்டு, இசை - வேற யாரு?? ராஜாதான், பாடியது ?? பாட்ட கேட்டீங்க இல்ல,அப்புறம் என்ன டவுட்டு ? ஜேசு அண்ணா தவிர யாரல இது முடியும்???



4. “கண்ணே கலைமானே” - அல்டிமேட் பாட்டு, கண்ணதாசன் + இளைய ராஜா + யேசுதாஸ் கூட்டணியில் வந்த இன்னுமொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்..



5. “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” - பாசமலர் படத்தில் விச்சு + ராமமூர்த்தியின் கூட்டணி இசையில் T.M.S, P. சுசீலாவுடன் இணைந்து பாடியது.
இந்தப் பாட்டைக் கேக்க இங்க க்ளிக் பண்ணுங்க

என்னிக்காவது ராத்த்ரி தூக்கம் வரல்லன்னா நாலாவது பாடலையும் ஐந்தாவது பாடலையும் கேட்டுட்டு படுக்கைக்குப் போங்க, ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.

6. “மஞ்சம் வந்த தென்றலுக்கு” மௌனராகங்கள் படத்தில் ராஜா இசையில் பாலு பாடியது.மெலடிக்கு இலக்கணமா இந்தப் பாட்டை வைக்கலாம்.


7. “காற்றில் உந்தன் கீதம்” - ஜானி படத்தில் இசைஞானியின் இசையில் S.ஜானகி பாடிய எவர்கிரீன் பாடல்.


8. “பூங்கதவே தாழ்திறவாய்” - ராஜாவின் பாடல்களுக்காவே ஓடிய பல படங்களில் ஒன்றான நிழல்கள் படத்தில் தீபன் சக்கரவர்த்தியின் Mesmerizing குரலில் ஒலித்தப் பாட்டு.
தீபன் வெள்ளித்திரையில் பெரிய அளவுக்கு வராததுக்கு காரணம் என்னன்னு தெரியல. இந்தப் பாட்டைக் கேட்டா அவரும் பாலுவின் அளவுக்கு வந்திருக்கணும்னு தோணும்.



9. “ தென் பாண்டிச் சீமையிலே” படம் - நாயகன், இசை : Default குரல் : ரெண்டு வெர்ஷன் இருக்கு, பாலு பாடியது பாடியது ஒண்ணு, ராஜா மற்றும் தலைவர் பாடியது ஒண்ணு ரெண்டுமே டாப்பு.பாட்டு சின்னதா இருந்தாலும் அது க்ரியேட் பண்ணும் Impact ரொம்ப பெரிசு



10. “சங்கீத ஜாதி முல்லை” - இசைப் பாமரனான என்னைக் கூட தொடை தட்ட வைக்கும் (என்னோட தொடையைச் சொன்னேன்) ராஜாவின் கம்போசிஷன். குண்டனின் Career
peak ல இருக்கும் போது பாடியது. நீங்களும் கேளுங்க..




பத்து பாட்டும் மட்டும்தான்னு மொதல்ல சொன்னதால இங்க முடிக்கறேன், இளைய ராஜாவின் பாட்டுக்கள் பத்தி எழுத புத்தகமே போதாது, ஒரு இடுகையில எங்க முடிக்கறது.
ஒரு ஜோக்கோட முடிச்சிக்கறேன்..

இளையராஜா ஒரு முறை வெளிநாட்டில் இருக்கும் போது நண்பர் ஒருவர் அவரை ஒரு ஹாலிவுட் பிரபலத்திடம் அறிமுகப் படுத்தினாராம் இவர் ஐநூறு படங்களுக்கு இசை அமைத்தவர் என்று. அவங்க எல்லாம் வருஷத்துக்கு ஒரு படம் முடிச்சாலே பெரிய விஷயம், 500 படம் பத்தி கேட்டு மிரண்ட அந்த பிரபலம் ராஜாவைப் பாத்து கேட்டராம் உங்களுக்கு எத்தனை பசங்கன்னு? மூணுன்னு பதில் சொன்ன ராஜாவைப் பாத்து அவர் கேட்டாராம் - When did you get time???

நீங்களும் உங்களுக்கு பிடிச்ச பாடல்களை லிஸ்ட் பண்ணி ஒரு இடுகை போடுங்களேன், நாங்களும் கேக்கறோம்...

Monday, April 26, 2010

டாலர் தேசம் 1

நானென்ன பா.ரா வா? இந்த டாலர் தேசம் தொடருக்கு வேற யாராவது முன்னுரை எழுத?

நான் வலைப்பூக்கள் பக்கம் வர ஆரம்பிச்சது 2006ல். மொதல்ல படிக்க ஆரம்பிச்சது டுபுக்கின் எழுத்துக்களை. அதில் இம்ப்ரெஸ் ஆகி இன்னும் பல தளங்களைப் படிக்க ஆரம்பிச்சேன்.

2007, 2008ல பல வலைப்பூக்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பிச்சேன், பின்னூட்டப் பதிவராகவே பல இணைய எழுத்தாளர்களுக்கு (இப்போ இந்த Title தான் ஃபேஷன்ல இருக்கு) அறிமுகம் ஆனேன். என்னோட பின்னூட்டங்களைப் பாத்த சில நண்பர்கள் என்கிட்ட கூட சரக்கு இருக்குறதா (தப்பா) நெனச்சி என்னையும் ப்ளாக் தொறக்கச் சொன்னாங்க.

யாருமே பத்த வெக்காமலே ஐஸ்லாண்ட் எரிமலை (அந்த எடத்தோட பேரின் ஸ்பெல்லிங் காப்பி பேஸ்ட் பண்றதுக்குக் கூட கஷ்டமா இருக்கு, எப்படித்தான் உச்சரிக்கராங்களோ?) பத்தி
எரிஞ்ச மாதிரி என்னோட எழுத்துத் தாகம் பத்தி எரிஞ்ச போது ஹாலிவுட் பாலாவும் வெட்டிப்பயல் பாலாஜியும் ரொம்ப கஷ்டப் பட்டு எனக்கு ப்ளாக்னா என்னன்னு புரிய வச்சு ஒரு பக்கத்தையும் வடிவமைச்சுக் கொடுத்தாங்க.(அதுக்காக வருத்தப் பட்டு முடிச்சிட்டாங்களா இல்ல இன்னும் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காங்களான்னு தெரியல)

கிறுக்குறதுன்னு முடிவான அப்புறம் என் பேச்சை நானே கேக்காம கண்ட படி கிறுக்கலாமுன்னு நெனச்சேன், ஆனா எனக்கு முன்னாடி இருந்த மிகப் பெரிய கேள்வி - என்ன எழுதுறது?
நானெல்லாம் எழுதுறேங்கறதே ஒரு காமடி இந்த அழகுல நான் எங்க காமடியா எழுதுறது? எனவே எனக்கு கொஞ்சூண்டு தெரிஞ்ச அமெரிக்கன் விசா, வேலை வாய்ப்பு,Green Card, Spoken English, Personality Development பத்தி எழுதலாமுன்னு ஆரம்பிச்சேன். ஒரு சில பதிவுகள் மட்டுமே எழுதிய நிலையில் ஏதேதோ இலக்கில்லாம எழுதினேன். எழுத நேரமிருந்தாலும் என் சோம்பேறித்தனத்தினால் எந்த ஒரு தலைப்பைப் பத்தியும் தொடர்ந்து எழுதல.


இப்போ நான் சொல்லப் போற விசயம் எப்பவுமே நடக்கறதுதான். இருந்தாலும் கடந்த சில வாரங்களில் நடந்த சில பல நிகழ்வுகள் என்னை இந்த தொடர் எழுத வச்சிருக்கு.

1. வளைகுடா நாட்டில் கணணித்துறையில் இல்லாத ஒரு பதிவுலக நண்பர் ஒரு நாள் சாட்டில் வந்து SAP படிக்கலாமுன்னு இருக்கேன், அமெரிக்காவில் SAP இல் வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்குன்னு கேட்டார். கணணித்துறையில் வேலை பாக்கும் நண்பர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் 10-15 வருட அனுபவத்தை விட்டு விட்டு துறை மாறத் துணிந்த நண்பரை Discourage செய்தேன்.

2. சீமாச்சு அவர்களின் தோழி அவரிடமிருந்து என் கைப்பேசியின் எண் வாங்கி சென்ற வார இறுதியில் பேசினார். இந்தியாவில் நல்ல கல்லூரியில் B.E Mechanical முடித்து,
அமெரிக்காவில் M.S Mechcalincal Engineering படித்த அவருக்கும் Software Developmentக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. அவரது கேள்வி - நான் எப்படியாவது அமெரிக்காவில் ஐடியில் செட்டிலாகணும், வழி சொல்லுங்க என்பதே. அவருக்கு அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கிச் சொன்னேன்.

3. அமெரிக்காவில் வேலை செய்து வரும் பல நண்பர்களுக்கு H1B மற்றும் Green Card பத்தி பல விஷயங்களில் தெளிவின்மையை கண்டிருக்கிறேன். அதற்கு அவர்களையும் குறை
சொல்ல முடியாது, ஏன்னா அவங்க வேலை செய்யும் கம்பெனியில் Transparency என்பது மருந்துக்குக் கூட கிடையாது. H1B விசாவில் வேலை செய்யும் ஒரு கணணி பட்டதாரிக்கு அவருக்கு உள்ள உரிமைகள் பத்தி கூட சமயத்தில தெரியரதில்ல. சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் கட்டிடத் தொழிலாளிகள் மாதிரி கன்சல்டன்சிகாரன் கூப்பிட்டான் இங்க வந்துட்டேன், ஆனா வேலை கிடைக்கல / சம்பளம் கொடுக்கலேன்னு புலம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன்.

4. சென்னையில் உள்ள பக்கத்து வீட்டுக்காரர்,என்னுடன் டெல்லியில் பணிபுரிந்தவர்,என் மாமா அனைவருக்கும் ஒரே கேள்வி - என் மகன் B.E படிச்சி முடிச்சிட்டான், அவனுக்கு அமெரிக்காவில் ஐடில ஒரு வேலை வாங்கி கொடுப்பியா என்பதுதான்.

5. இன்னொரு பதிவுலக நண்பர் புகைப்படத்துறையில் நிபுணர், அவருக்கும் ஒரு கேள்வி - தான் அமெரிக்கா எப்படி வருவது? வந்தா கேமரா மேன் வேலை கெடைக்குமா???

இப்படி நம்மில் பலருக்கும் அமெரிக்கா பற்றி ஒரு மாயை இருக்கு (வெளிய இருக்குறவங்களுக்கு எப்படி உள்ள வர்றது மற்றும் உள்ள வந்தவங்களுக்கு எப்படி இங்க நிரந்தரமா தங்கறது) இதுக்குக் காரணம் ஒரு டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய். 1 $ = 1 ரூபாய் அதுகூட வேணாம் 1$ = 10 ரூபாய்னு ஆச்சுன்னா நம்மில் பல பேருக்கு அமெரிக்க ஆசை போயிடும். அதனால தான் பா.ரா உபயோகித்த தலைப்பாக இருந்தாலும் இதையே இந்த தொடருக்கு வச்சிருக்கேன்.

US Immigration (H1B, Green Card Process), Full time - Consulting jobs in USA, Study and work in USA, Living in USA
பத்தியெல்லாம் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச விஷயங்களை எழுதலாமுன்னு இருக்கேன். இது பத்தி சம்பந்தப் படாதவர்களுக்கு இது போரடிக்கும், நான் எது எழுதினாலும்தான் போரடிக்கும்,
இது சில பேருக்காவது உபயோகமா இருக்கும் எனவே பொருத்தருள்க.

மொதல்ல நல்ல விஷயத்தைப் பத்தி சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்னால் இருந்த உள்நுழைவு பிரச்சனை பத்தி நம்ம பழமை பேசி இந்த இடுகையில் எழுதியிருந்தார், அதிலேயே இது பத்தி தெளிவு கெடச்சவுடனே எழுதறேன்னு சொல்லியிருந்தேன். என்னோட சோம்பேறித்தனத்தால இன்னிக்கு வரை எழுதல, அது பத்தியும் Current Job Market பத்தியும் அடுத்த இடுகையில எழுதறேன். Stay Tuned for the next post.. Adios


டிஸ்கி : நான் எழுதத் துணிந்த சப்ஜெக்ட் ரொம்பப் பெரிசு.எதப் பத்தி எழுதறதுன்னு யோசிச்சிக்கிட்டே எதப்பத்தியும் எழுதாம காலத்தை ஓட்டிடுவேன் நான், எனவே நீங்க உங்களுக்கு இருக்கும் கேள்விகளை பின்னூட்டத்திலோ அல்லது தனிமடலிலோ அனுப்பினால், அதுக்கு பதில் சொல்லும் சாக்கில் ஒரு தலைப்பை கவர் பண்ணிடுவேன்.
அதுக்காக பாஸ்டன்ல Strip Club எங்க இருக்குன்னெல்லாம் கேக்கப் படாது...சொல்லிட்டேன்..

Friday, April 2, 2010

டாப் டென் படங்கள்

தருமி ஐயாவோட இந்த பதிவ படிச்ச உடனே ரூமெல்லாம் போடாம ஒக்காந்து யோசிச்சேன் - நான் இது வரை பார்த்த தமிழ் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் எதுன்னு.

நானெல்லாம் ஒரு காமடி பீஸு, என்னை யாரும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டங்க, அதனால நானே ஜீப்பில ஏறி இந்த டாப் டென் பதிவ போடறேன்.

இந்த பத்துப் படங்கள் தமிழ்த்திரையுலகின் மிகச் சிறந்த படங்கள்னு அர்த்தமாகாது, நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் இவை.

1. அன்பே சிவம்

2. மொழி

3. மூன்றாம் பிறை

4. நாயகன்

5. எதிர் நீச்சல்

6. தவமாய் தவமிருந்து

7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை

8. ஆண் பாவம்

9. முதல்வன்

10.ரிதம்.

பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.


இதைப் படிக்கும் அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த பத்து படங்களை பட்டியலிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Thursday, April 1, 2010

ரொம்ப நல்லவனின் இரு தவறுகள் மற்றும் இரு வேடங்கள்

ஒரு ஊர்ல ஒரு தான் தோன்றி இருந்தானாம். அவன் ஒரு நாள் ரொம்ப நல்லவங்க ஒண்ணா கூடின எடத்துக்குப் போயிட்டு வந்து தன்னோட நோட்டுப் புத்தகத்தில அது பத்தி
கிறுக்கினானாம். அப்படி கிறுக்கயில ரெண்டு தடவ தப்பு பண்ணானாம். ஒரு தப்பு ஒரு தனி மனுஷியப் பத்தி கமெண்ட் சொன்னது, ரெண்டாவது தப்பு ஒரு சமூகத்தையே நோக்கி
காரணமில்லாமல் மற்றும் அடிப்படை இல்லாமல் புழுதியைத் தூற்றினது.

ரெண்டுமே தப்புதான்னு அவனுக்கும், அவனைச் சுற்றி இருப்பவர்களுக்கும், அந்த நல்லவங்க கூட்டம்னு சொன்னேனில்ல அங்க வந்த எல்லோருக்கும் தெரியும். ஒரு சமூகத்துக்கே அவன் செஞ்ச கொடுமையை எல்லோரும் சுட்டிக் காட்டியும், பல பேர் காட்டமாகக் கூறியும் அவன் அதை தவறுன்னு ஒத்துக்கவுமில்லை, கிறுக்கியதை ரப்பர் போட்டு அழிக்கவுமில்லை. இந்த பஞ்சாயத்து நாலஞ்சு நாள் நடந்தும் இதுதான் நிலைமை.

இவன் ஒரு பெண்மணிக்கு செஞ்ச தப்பை யாருமே சில நாள் கண்டுக்கலை (பெரிய தப்பு சின்ன தப்பை மறைத்து விட்டதுன்னு நினைக்கிறேன்), நாலு நாள் கழிச்சி இரண்டாம் கம்பர்
நல்லவங்க கூட்டம் நடத்தின பின்னர் நடக்கும் அரசியல் பத்தி தன்னோட நோட்ல எழுதும் போது தான் தோன்றியின் இந்த தப்பை சுட்டிக் காட்டி துப்பியிருந்தார். உடனே களத்தில குதிச்ச நண்பர்கள் இது தப்பு, இது தப்புன்னு பின்பாட்டு பாடினார்கள். சம்பந்தப்பட்ட பெண்மணியும் தான் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமையை தான் பெருந்தன்மையாக மன்னித்து விட்டதாக சொல்லிட்டாங்க. இதுல வேடிக்கை என்னன்னா தான் தோன்றி தான் தப்பாக எதுவும் சொல்லவில்லை, தனது வார்த்தைகளை இரண்டாம் கம்பர் திரித்து விட்டாதாக சொன்னான். அப்படி சொல்லிட்டு உடனே அடிச்சான் பாருங்க பல்டி.. அந்தர் பல்டி, இந்தர் பல்டியெல்லாம் தோத்துப் போயிடும் இவருகிட்ட.

தான் தவறு செய்யவே இல்லைன்னு நம்புறவன் என்னா செய்யணும், சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேச்சின் மூலமோ எழுத்தின் மூலமோ தனது நிலைப் பாட்டை தெளிவு படுத்தி இருக்கணும். ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சாருன்னா, சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு போன் பண்ணி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஏன்னா ஒரு பெண் சம்பந்தமான குற்றச்சாட்டு தன் மீது சுமத்தப் பட்டால் என்ன ஆகும்னு ஹீரோவுக்கு நல்லாவே தெரியும். கவுஜ படிக்க வர்ற பெண்கள் யாரும் வரமாட்டாங்களே.. கடையில யாருமே கல்லா கட்ட மாட்டாங்களே...


ஒரு பெண்மணிக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை உணர்ந்து தான் தவறு செய்ததாகவே கருதாத போதிலும் மன்னிப்பு கேட்ட தான் தோன்றி ஒரு சமூகத்தையே கேவலமாகப் பேசியதன் மூலம்
பலருக்கு ஏற்பட்ட (நான் உள்பட) மனவருத்தத்தைப் போக்க ஏதாவது செய்வாரா??? யாராவது கேட்டு சொல்லுங்களேன்... ரெண்டாம் கம்பரே..உங்க சொல்லுக்கு ஹீரோ மதிப்பு
தருவான்னு நெனைக்கிறேன்.. you too Kambar? கேள்விக்கு பதில் சொல்லிட்டு இதுக்கு பதில் கேட்டுச் சொல்லுங்களேன்...


டிஸ்கி 1: இது ஒரு கற்பனைக் கதை, யாரையும் குறிப்பதில்லைன்னு ஜல்லி அடிக்கப் போறதில்லை, நீங்க நெனைக்கிற ஆளைப்பத்தித்தான் சொல்லி இருக்கிறேன்.

டிஸ்கி 2 : இது பல நாள் குமுறல், சும்மா சும்மா தேவையில்லாம பாப்பான்னு எழுதினா எவண்டா ஜாட்டான்னு நானும் கேக்கலாமுன்னு இருக்கேன்.

டிஸ்கி 3 : இது நாள் வரை பின்னூட்டப் பெட்டி திறந்த்துதான் இருந்தது, உங்க எல்லாரோட Maturity மேல இருக்குற நம்பிக்கையில இன்னிக்கும் அப்படியே வச்சிட்டு தூங்கப்
போறேன்.

Sunday, February 7, 2010

அப்ரைசல் ஆப்பு வைக்காமல் இருக்க:

நல்ல நாளிலேயே நமக்கெல்லாம் அப்ரைசல் ஆப்புவைக்கும் வைபவமாகவே இருக்கும், இப்போ இருக்குற (உண்மையிலேயே இன்னும் இருக்கா??)பொருளாதார மந்த நெலமையில ஆப்பு இன்னும் ஸ்ட்ராங்காவே இருக்கும். அப்படியெல்லாம் ஆகாம இருக்க என்ன பண்ணனும்னு இந்தப் பதிவில் பாக்கலாம்.


மொதல்ல Performance Appraisalனா என்னன்னு பாக்கலாம், ஏற்கனவே முடிவு செஞ்சி வச்சிருக்குற ஊதிய உயர்வை கொடுக்குறதுக்குஅல்லது ஊதிய உயர்வு இல்லேன்னு சொல்றதுக்கு முன்னாடி நடக்குற சடங்குன்னு நீங்கல்லாம் சொல்றது கேக்குது, ஆனால் Ideal Appraisal அப்படி இருக்கக் கூடாது.

அப்ரைசலின் முக்கிய நோக்கங்கள்

சென்ற வருடத்தில் நீங்க செஞ்ச வேலைக்கான Feedback கொடுக்க

நடப்பு ஆண்டிற்க்கான் இலக்கை நிர்ணயம் செய்ய (To set the Target for this Year)

சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் தேவையானவற்றை முடிவு செய்ய (To set a base for salary increases, promotions,bonuses)

நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த.

சில பல நிர்வாகங்கள் வேலை செய்பவர்களை சுய மதிப்பீட்டு அறிக்கை (Self Evaluation report) கொடுக்கச் சொல்வார்கள். உங்க கம்பெனியில் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இந்த ரிப்போர்ட்டை கண்டிப்பா அப்ரைசலுக்கு முன்னர் தயார் பண்ணுங்க,This will help you in presenting your case in the appraisal and to be in the driver's seat of the review process. இதில் நாலு விஷயங்களை கவர் பண்ணனும், அவை

1.Job Resposibilities and Skills
2. Achievement
3.Overall Performance and
4.Goal Setting.


தனக்குத்தானே ரிவ்யூ எழுதுவது கடினமான காரியம், முடிந்த அளவுக்கு ரிவ்யூ சப்ஜெக்டிவ்வாக இல்லாமல் Measurable ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Tangible / Measurable format will allow you to show how you are contributing to your employer's bottom line.

உதாரணமாக : Your contribution in getting a new client on board and the revenue from that client.

1. திறமைகள் மற்றும் வேலை விவரங்கள் (Skills and Job Responsibilities)

ரிப்போர்ட்டின் முதல் பாகத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் (ஆபிஸ் நேரத்தில் ப்ளாக் படிப்பதையும் கிறுக்குவதையும் சொல்லவே கூடாது)
- Phone calls, Emails, Budgets, Account Follow up, Client meetings, Coding, Testing எதையும் விடாமல் பட்டியலிடுங்கள்.
அடுத்து உங்களுக்கு இருக்கும் அனைத்து திறமைகளையும் (அப்படின்னு ஒண்ணு இல்லாதவங்க என்னய மாதிரி கற்பனை குதிரையைத் தட்டிவிட்டு ஏதாவது
எழுதுங்க) - Strong Communication skills, Project managament skills, Ability to focus on achieving strategic objectives Nurturing and instilling confidence in your team memebers - பட்டியலிடுங்கள்.

நீங்க செய்த வேலைகளையும், குறிப்பிட்ட வேலையை தனியாகச் செய்தீர்களா அல்லது ஒரு குழுவின் அங்கமாக செயல்பட்டீர்களா என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவையோ (Division) ஒரு குறிப்பிட்டா க்ளையண்டையோ நீங்கள் நிர்வகித்து இருந்தால், அந்தப் பிரிவின் சென்ற வருட இலக்கையும (Target), Achievementயும் குறிப்பிடுங்கள். Mentioning the value makes a better impact.

Ex : I manage a team, I lead the group, I worked with the team on XYZ accounts, I worked on a $ 50 M account alone successfully, managing the day to day communication with 100 clients.

2. சென்ற வருடத்தில் நீங்க சாதித்ததை (Achievement) தெளிவாகப் பட்டியலிடுங்கள். Be Honest but make sure to acknowledge all your accomplishments. இங்கு உபயோகிக்க வேண்டிய சில வார்த்தைகள்

** Successfully
** Contributed
** Negotiated
** Supported
** Nurtured


நீங்கள் தனியாக சாதித்தவற்றையும், குழுவாகச் செய்தவற்றையும் தனித்தனியே குறிப்பிடுங்கள். ஒரு போதும் அணியின் / இலாகாவின் (Team / Department)வெற்றியை தனதாக்க வேண்டாம்.

நீங்கள் கொணர்ந்த க்ளையண்ட் மூலம் சென்ற வருடம் கிடைத்த வருமானத்தை மட்டுமல்லாமல் வருமாண்டுகளில் அந்த க்ளையண்ட்டிடமிருந்து எதிர்நோக்கும்
வருமானத்தையும் குறிப்பிடுங்கள் (Forecast)

சென்ற வருடம் உங்கள் கம்பெனி சரிவை நோக்கி சென்றிருந்தால், உங்கள் இலாகா மற்ற இலாகாகளை விட எவ்வாறு சிறப்பாக செயல்பட்டதுன்னு சொல்லுங்க
Ex. Successfully cut costs to help the bottomline of the company.

3. Overall Performance.
இதில் மூன்று விஷயங்கள சொல்லணும், Strength, Growth and Areas that need improvement.

கண்டிப்பா ஓரிரு பாயிண்ட் Needs Improvement லிஸ்டில் இருக்கட்டும் (This enhances your credibility) ஆனா எப்பவும் Strength லிஸ்ட்ல அதிக பாயிண்ட்ஸ் இருக்கட்டும்.

Strength : List what you do and feel confident about. Demostrate your understading of the market in which your company operates. கம்பெனியின் வளர்ச்சிக்கும் லாபத்துக்கும் உங்களின் பங்கை தெளிவாகச் சொல்லுங்கள்.

Growth : சென்ற வருடத்தில் நடந்த முக்கியமான வளர்ச்சிகளை குறிப்பிடுங்கள். நீங்க புதுசா கத்துக்கிட்டதை எப்படி Implement செஞ்சீங்கன்னு சொல்லுங்க
EX : Skill your recently acquired, How PMP certification helped you to be a better project manager etc.

Needs Improvement : நீங்க எந்தெந்த விஷயங்களில் முன்னெற நினைக்கிறீர்கள்னு சொல்லுங்கள், கூடவே இலக்கினை அடைய இதுவரை எடுத்துள்ள முயற்சி பற்றி சொல்லுங்கள். இலக்கினை அடைய உங்களின் திட்டமும் Deadline உம் மிக அவசியம்.


4. அடுத்தாண்டிற்கான இலக்கு (Goal Setting):
அடுத்தாண்டுக்கான நீங்கள் எண்ணியிருக்கும் டார்கெட்டை குறிப்பிடுங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும் - கை எட்டும் தூரத்தில் இருப்பது - Reachable கஷ்டப்பட்டு எட்டிப் பிடிப்பது - Goal. உங்க கோல் எப்போதும் கஷ்டப்பட்டு எட்டும் படி இருக்கட்டும். அதுக்கப்புறம் உங்க மேனேஜரிடம் கலந்தாலோசித்து இலக்கில் மூன்று விஷயங்களை முடிவு செய்யுங்கள்.

இலக்குகள் என்னென்ன (What are the goals)

அவற்றை அடையும் வழி மற்றும் திட்டம் (How to achieve the goals)

Priority and On a Scale of one to hundred what weight do they have on your job.


Plan B - மாற்றுத்திட்டம் திட்டமிடலின் முக்கிய அம்சம், உங்களின் Plan B யும் தெளிவாக இருக்கட்டும்.

இவற்றின் மூலம் உங்களின் அடுத்தாண்டு அப்ரைசல் எதன் அடிப்படையில் இருக்குமென்று தெளிவாக குறிப்பிட முடியும்.

Good luck with your evaluation and remember - There is no harm in self promotion.

பின்குறிப்பு : எவ்வளவோ முயன்றும் இதை விட கம்மியா ஆங்கிலம் உபயோகிக்க முடியவில்லை, மன்னிக்கவும்.